குட் நியூஸ்..! இனி இரண்டே நாட்களில் சாதி சான்றிதழ்: தமிழக அரசு அதிரடி!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு சமூக நீதித் துறை வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.
சாதிச் சான்றிதழ்
Caste Certificate
Updated on

தமிழ்நாட்டில் சாதி, வருமானம் மற்றும் ஓபிசி சான்றிதழ்களை பெற ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு சான்றிதழ் கிடைக்க குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கும் மேல் ஆகிவிடும் என்பதால், இது மாணவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. பள்ளி மற்றும் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த கால இடைவெளியை வெறும் 2 நாட்களாக குறைக்க சமூக நீதித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இனி விண்ணப்பித்த 2 நாட்களிலேயே சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும். இதற்கான புதிய ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது சமூக நீதித் துறை.

இதையும் படியுங்கள்:
ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்: இனி 6 மாதத்திற்கு கட்டணமே கிடையாது!
சாதிச் சான்றிதழ்

சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மாணவர்களின் கல்வி மற்றும் வேலை உள்ளிட்ட தேவைகளைக் கருத்தில் கொண்டு தற்போது சாதிச் சான்றிதழை விரைந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாகவே அரசு சார்ந்த அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவை உடனடியாக தேவைப்படும்.

ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர்கள் சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது வழக்கம். இந்த விண்ணப்பங்களை விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பிறகே தாசில்தார் ஒப்புதலுக்கு செல்லும். இதனால் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்தக் கால தாமதத்தைக் குறைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது சமூக நீதித் துறை. இது சம்பந்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் தற்போது வெளியாகி உள்ளன.

சமூக நீதித் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:

* ஆதிதிராவிட மக்கள் சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பித்தால் 2 நாட்களில் அதிகாரிகள் வழங்க வேண்டும்.

* அதேபோல் பழங்குடியின மக்களுக்கு 7 நாட்களுக்குள் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

* SC/ST சமூகத்தினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் காலம் தாழ்த்தக் கூடாது.

* சாதிச் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதிச் சான்றிதழ்
Caste
இதையும் படியுங்கள்:
செம சான்ஸ்.. ஒரே நாளில் ரூ.2,160 சரிவு..! தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.!
சாதிச் சான்றிதழ்

கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் 5 நாட்களிலேயே அரசு சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதன்படி சாதி, வருமானச் சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களுக்கு வெகு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூக நீதித் துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சிறப்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருப்பினும் மற்ற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்போர், சிரமமுமின்றி உரிய நேரத்தில் சான்றிதழ்களைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com