#JUST IN : முடங்கியது நீட் தேர்வு இணையதளம் : 3-வது நாளாக விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு..!

NEET
NEET credits: Mint
Published on

NEET (UG) தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் சர்வர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பல மாணவர்கள் தொடர்ந்து 3-வது நாளாக விண்ணப்பிக்க முடியாமல் சிக்கலில் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

National Testing Agency (NTA) நடத்தும் NEET தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சர்வர் மெதுவாக இயங்குதல், Login பிரச்சனை, கட்டணம் செலுத்த முடியாத நிலை (Payment page error) , :விண்ணப்பம் ஏற்க மறுப்பு (Application submit) நிலை போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக பல முறை முயற்சித்தும் விண்ணப்பம் submit ஆகவில்லை என்றும் Payment deduct ஆனாலும் application confirm ஆகவில்லை என்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.கடைசி தேதிக்கு முன் பதிவு செய்ய முடியாததால் மாணவர்களுக்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அறிந்த NTA தொழில்நுட்ப குழு சர்வர் பிரச்சினையை (server issue) சரிசெய்யும் பணியில் உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சில நேரங்களில் website maintenance காரணமாக தற்காலிகமாக சேவை நிறுத்தப்படலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.

ஏற்கெனவே ஒரு வார காலமாக வருவாய் துறையினர் வேலைநிறுத்தம் காரணமாக தேவையான சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இது போன்ற தடைகள் மாணவர்களிடம் அழுத்தத்தை தருவதாக கூறப்படுகிறது.மேலும் தொழில் நுட்ப வல்லுநர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் படியும் , அதிக நேர traffic இருக்கும் நேரத்தை (மாலை/இரவு) தவிர்த்து முயற்சிக்கவும் , payment issue இருந்தால் transaction receipt சேமித்து வைக்கவும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

தமிழ்நாட்டில் NEET (UG) தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.4 லட்சம் – 1.6 லட்சம் மாணவர்கள் எழுதும் நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் எனும் கோரிக்கையையும் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரப்படுகிறது. மேலும் இது போன்ற நெருக்கடி சமயங்களில் மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ருசியான சிங்காரா ஊறுகாய்: நீர் கஷ்கொட்டையில் இப்படியொரு விந்தையா?
NEET

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com