இந்தியாவில் முதல்முறை: இந்திய அறிவு பற்றிய புதிய கல்வித்திட்டத்தைத் தொடங்கும் ஐஐடி கரக்பூர்!

IIT kharagpur
IIT kharagpursource:careers360
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on

கரக்பூரில் இருக்கும் ‘தி இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’(IIT – Kgp – The Indian Institure of Technology Kharagpur) போற்றத் தக்க ஒரு பணியைச் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அறிவுச் செல்வ அமைப்பு ( INDIAN KNOWLEDGE SYSTEM – IKS) என்ற ஒரு பாடதிட்டத்தை ‘மாஸ்டர்ஸ் ப்ரோக்ராமாக (MS) அது ஜூன் 2026 முதல் தொடங்க இருக்கிறது.

இப்படிப்பட்ட இந்திய அறிவைப் பற்றிய ஒரு படிப்புப் பிரிவு இந்தியாவில் தொடங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.கரக்பூர் ஐஐடி தான் இந்தியாவின் பழமையான ஐஐடி என்பது குறிப்பிடத்தகுந்தது. இது 1951ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி துவங்கப்பட்டது. ப்ளாடினம் ஜூபிலி கொண்டாட்டத்தை இந்த வருடம் ஆகஸ்ட் 18, 2026ல் இது கொண்டாடுகிறது.அதையொட்டி இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அறிவுச் செல்வம் மகத்தானது. அறிவியல், இலக்கியம், கணிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அது உலகிற்கு அளித்த கொடை, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்.

இதைப் பற்றிய பயிற்சித் திட்டத்தில் முதலில் 15 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

முதற்கட்டமாக 15 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் பண்டைய இந்திய அறிவியலை நவீன உத்திகளுடன் இணைக்கும் நான்கு முக்கியப் பிரிவுகள் உள்ளன:

  • சம்ஸ்கிருதம் மற்றும் இலக்கியம்: சம்ஸ்கிருத மொழி மற்றும் இலக்கிய ஆதாரங்களை நவீன காலத்திற்கு ஏற்ப விளக்குதல்.

  • முழுமையான உடல்நல மேம்பாடு: இதில் யோகா, வேதாந்தம், ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கற்றுத் தரப்படும்.

  • அறம் சார்ந்த தலைமைத்துவம்: பகவத் கீதை மற்றும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தின் அடிப்படையில், தார்மீக விழுமியங்கள் கொண்ட தலைமைத்துவத்தை உருவாக்குதல்.

  • தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்: பாணினியின் இலக்கண விதிகளுடன் இன்றைய Natural Language Processing (NLP) நுட்பங்களை இணைத்தல்.

வெறும் கொள்கைகளைக் கூறும் பாடத்திட்டமாக மட்டும் இந்தப் பயிற்சித் திட்டம் அமைக்கப்படவில்லை. இதற்கான லாப் – சோதனைச்சாலை ஒன்றும் இந்தத் திட்டத்தில் உண்டு.

நேரடிச் சோதனைகள் மூலம் கீழ்க்கண்டவை பயிற்சித் திட்டமாகத் தரப்பட உள்ளன:

  • பேச்சை உருவாக்கும் கல்வித்திட்டங்கள்

  • வானவியல்- கணிதம் கொண்ட கவனிப்புகளும் காட்சிப்பதிவுகளும்

  • மொழி பற்றிய ஆய்வுகள் மற்றும் பயிற்சிகள்

  • AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் NLP சோதனைகள்.

  • நியூரோ-பெனோமெனாலஜிகல் (Neuro-phenomenological) ஆய்வுகள்.

அறிவியல் சார்ந்த நவீன உத்திகள் இந்தச் சோதனைகளில் மேற்கொள்ளப்படும்.

மொத்தத்தில் இந்தியாவின் பண்டைய அறிவுச் செல்வத்துடன் நவீன அறிவியல் சார்ந்த நுட்பங்கள் இணைக்கப்படுவதால் இது அற்புதமான ஒரு கல்வித் திட்டமாக அறிஞர்களால் கருதப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் இயக்குநர் திரு. சுமன் சக்ரபர்த்தி அவர்கள் கூறுகையில், "பண்டைய இந்திய அறிவும், நவீன செயற்கை நுண்ணறிவும் கைகோர்க்கும் ஒரு களமாக இது அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நமது அறிவு உலகளாவிய விதத்தில் பரவ இது ஒரு நல்ல ஆரம்பம் என்று மகிழ்ந்து வாழ்த்துவோம் ஐஐடி கரக்பூரை!

இதையும் படியுங்கள்:
ஒரு ரேஸுக்காக ஒரு மாகாணத்திற்கே லீவு! - வியக்க வைக்கும் குதிரை ரேஸ் பற்றி தெரியுமா ?
IIT kharagpur
logo
Kalki Online
kalkionline.com