மக்களே உஷார்..! மீண்டும் பரவும் (சிக்காடா) கொரோனா வைரஸ்..!!

corona testing
corona testingimage source:hindustantimes
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

கொரானா ஓ மைக்ரான் வகையைச் சேர்ந்த (BA.3.2) பி ஏ 3 2 எனப்படும் சிக்காடா கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது என்ற தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 75 மரபணு மாற்றங்களை கொண்டுள்ள இந்த வைரஸ் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கும் தன்மை கொண்டதாகக் கூறினாலும் முந்தைய கொரானாவின் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது ஆறுதல் தரும் விஷயமாகிறது.

ஓமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 (Cicada) கொரோனா வைரஸ் பற்றி தற்போது சில செய்திகளில் வந்திருப்பதால் அதைப் பற்றிய கவனம் அதிகரித்துள்ளது. BA.3.2 (Cicada) வைரஸ் என்பது ஓமிக்ரான் மாறுபாடு (Omicron variant)-இன் ஒரு துணை மாற்றம் (sub-variant) ஆகும். இந்த வைரஸ் 2024 ல் முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் (South Africa-)கண்டுபிடிக்கப்பட்டு

2025 இறுதியில் இருந்து பல நாடுகளில் மெதுவாக பரவத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) இதை கவனிக்கப்படும் வகை (Variant Under Monitoring)என்று வகைப்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் நீண்ட காலம் குறைவாக இருந்த பிறகு திடீரென மீண்டும் அதிகரிக்கும் தன்மையுடன் இருந்ததால், நீண்ட காலம் மண்ணுக்குள் இருந்து வெளிவரும் சில்வண்டின் சிக்காடா (Cicada) பூச்சியைப் போல இருப்பதால் இந்த பெயரால் அழைக்கப்படுகிறது.

பல நாடுகளில் இன்னும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தாத இந்த வைரஸ் ஆபத்தானதா என்றால் அதிகம் இல்லை என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆனால் முந்தைய கொரானாவின் அறிகுறிகளைப் போலவே காய்ச்சல், இருமல், சோர்வு, தொண்டை வலி, உடல் வலி, மூக்கு ஒழுக்கு, சிலருக்கு ஸ்மெல் டேஸ்ட் (smell/taste) குறைவாக இருப்பது போன்றவைகள் ஏற்படும். இதை மீறிய புதுவித அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தடுப்பூசிகள் கடுமையான தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பெரிய அளவில் இந்த காய்ச்சல் பரவல் இல்லை என்ற தகவல் உள்ளது.

இந்த காய்ச்சல் ஆபத்தில்லை என்பதாலும் இதற்கும் பொதுவான கோவிட் முன்னெச்சரிக்கைகள் (COVID precautions) போதுமானது என்பதால் மக்கள் பயப்பட தேவையில்லை.ஆனால் காய்ச்சல் இருந்தால் அலட்சியம் காட்டாமல் டெஸ்ட் எடுப்பது ,

கூட்டம் அதிகமான இடங்களில் தேவையானால் மாஸ்க் அணிவது, முதியவர்களுக்கு தடுப்பூசி போடுவது, போதுமான தூக்கம் நல்ல உணவுடன் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

இணையங்களில் பரவும் தகவல்களைக் கண்டு எழும் தேவையற்ற பயத்தை விடுத்து தகுந்த சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தாலே எந்த நோய்த்தொற்றும் விட்டு விலகிவிடும் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

இதையும் படியுங்கள்:
வாலி - சுக்ரீவன் பிறந்தது எப்படி? தேவர்களும் வியந்த அந்த விசித்திரக் கதை!
corona testing
logo
Kalki Online
kalkionline.com