இனி Social Media-ல் வதந்தி பரப்பினால் 2 மணி நேரத்தில் ஆக்ஷன்! மத்திய அரசின் புது ரூல்ஸ்..!

சர்ச்சைக்குரிய வீடியோக்களை 2 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என சமூக ஊடகங்களுக்கான விதிகளை கடுமையாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
social media central govt
social media central govt
Updated on

நீட் தோ்வு விவகாரத்தில் போராட்டத்தில் மாணவா்கள் ஈடுபட்டதை அடுத்து, அவா்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிரதமா் மோடி ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் (சமூக ஊடகங்கள்) கடந்த மாதம் 23-ம்தேதி வீடியோ வெளியிட்டிருந்தாா். அப்போது, வினாத்தாள் கசிவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து அவா் அதில் விளக்கமளித்தாா்.

இன்ஸ்டாகிராமில் அப்பதிவை சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானோா் பாா்த்து பகிா்ந்த நிலையில், ஃபேஸ்புக்கில் இருந்து அப்பதிவு நீக்கப்பட்டது. ஆனால் அந்த வீடியோவை முதலில் நீக்கிய ஃபேஸ்புக், 5 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் அதை வெளியிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞா்களை அணுகும் நோக்கில் பிரதமா் வெளியிட்ட இந்த வீடியோ நீக்கப்பட்டது ஃபேஸ்புக் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மெட்டா குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அரசு தரப்பில் நேரில் வரவழைக்கப்பட்டு மன்னிப்பு கோர செய்தனர். இந்நிலையில், சமூக ஊடகங்களுக்கான விதிகளை கடுமையாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சமூக ஊடக நிறுவனங்கள் இனி முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சென்சிட்டிவ் பதிவுகளை (Sensitive Content) நீக்குவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை, இரண்டு மணி நேரமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

புதிய விதிகள், நிர்வாணம், ஆள்மாறாட்டம், போலி அடையாளம் போன்ற சென்சிட்டிவ் புகார்கள் வந்தால், அவற்றை 2 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தக் காலக்கெடு 24 மணி நேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றங்கள், 2026 பிப்ரவரி 10-ம்தேதி தகவல் தொழில்நுட்ப விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி படங்கள், காணொளிகள் (டீப் ஃபேக்) உள்ளிட்ட தவறான தகவல்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி, அரசாங்கத்திடமிருந்து முறையான, நியாயமான அறிவிப்பு அல்லது நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றவுடன், சட்டவிரோத உள்ளடக்கங்களை சமூக ஊடக நிறுவனங்கள் 3 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.

சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்கள்AI Image

இதற்கு முன்பு இந்த அவகாசம் 36 மணி நேரமாக இருந்த நிலையில் தற்போது அது 3 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயனர்கள் அளிக்கும் புகார்களை தீர்ப்பதற்கான காலக்கெடு 72 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட முக்கிய சமூக வலைதள நிறுவனங்கள், பாலியல் வன்கொடுமை, குழந்தைப் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது அது தொடர்பான நடத்தைகளைச் சித்தரிக்கும் உள்ளடக்கத்தையும், முன்னர் அகற்றப்பட்ட உள்ளடக்கத்தைப் பெருமளவில் ஒத்திருக்கும் உள்ளடக்கத்தையும் முன்கூட்டியே கண்டறிவதற்காக,

இதையும் படியுங்கள்:
நீட் போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்த நடிகர்கள் மற்றும் பிரபலங்கள்!
social media central govt

தானியங்கு கருவிகள் அல்லது பிற பொருத்தமான வழிமுறைகள் உள்ளிட்ட தகுந்த தொழில்நுட்ப நடவடிக்கைகளைச் செயல்படுத்த நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு சலுகை ரத்து செய்யப்படலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், அந்த நிறுவனங்கள் தங்கள் தளத்தில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களுக்கு சட்டரீதியான பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
டெல்லியில் வெடித்த காங்கிரஸ் போராட்டம்: பிரதமரை பதவி விலகக் கோரி ராகுல் காந்தி தீவிர முழக்கம்!
social media central govt

மேலும், வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்படவோ அல்லது பிற நடவடிக்கைகள் எடுக்கப்படவோ வழிவகுக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com