46,000 புதிய ரேஷன் கார்டுகள் ரெடி.! ஓரிரு நாட்களில் விநியோகிக்க தமிழக அரசு முடிவு..!!

தமிழகம் முழுவதும் ஓரிரு நாட்களில் 46,000 புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய ரேஷன் கார்டுகள்
புதிய ரேஷன் கார்டுகள்
Updated on

புதிய ரேஷன் கார்டு கேட்டு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஓரிரு நாட்களில் 46,000 புதிய ரேஷன் அட்டைகள் (குடும்ப அட்டைகள்) விநியோகம் செய்யப்பட உள்ளதாக உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் கூட்டுறவுத் துறையின் மூலம் நியாயவிலைக்கடைகள் வாயிலாக இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 28 லட்சத்து 12,942 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். பொருட்களை நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் 35,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதே நேரம் ரேஷன் கார்டுகள் உணவு பொருட்களை வாங்குவதற்கான ஆவணங்களாக மட்டுமில்லாமல், அரசின் உதவிகளை பெற அடையாள அட்டையாக உள்ளது.

அந்த வகையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவச மற்றும் மானிய விலையிலான அரிசி, பாமாயில், பருப்பு வகைகள் மட்டுமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடர் நிவாரண உதவிகள் மற்றும் அரசு வழங்கும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு தான் பிரதான சான்றாக விளங்குகிறது. குறிப்பாக தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு மிக அத்தியாவசியமான ஆவணமாகும்.

இந்நிலையில் தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பிப்பதற்காக ஏராளமான பெண்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதையடுத்து, அதை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தல் வந்ததால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாலும், மற்றும் சில நிர்வாகக் காரணங்களாலும் இந்த அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..!
புதிய ரேஷன் கார்டுகள்

மேலும் மீண்டும் எப்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு முதற்கட்டமாக 46,000 ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அச்சிடப்பட்டு தயாராக உள்ள 46,000 புதிய ரேஷன் கார்டுகளையும் விநியோகிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதிய ரேஷன் கார்டுகள்
புதிய ரேஷன் கார்டுகள்

உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் 2 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட் புதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதில் தற்போது முதற்கட்டமாக 46,000 ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில் விரைவில் புதிய அட்டைகள் கோரி விண்ணப்பித்துள்ள மற்ற தகுதியான நபர்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும்.

அதனடிப்படையில், விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள அனைவருக்கும் படிப்படியாக, அடுத்தடுத்த கட்டங்களாக புதிய ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியை இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக முதலமைச்சர் முறைப்படி தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
புதிய ரேஷன் கார்டு எப்போது வரும்? அமைச்சர் வெங்கட்ரமணன் சொன்ன குட் நியூஸ்..!
புதிய ரேஷன் கார்டுகள்

விரைவில் புதிய ரேஷன் கார்டுகளைப் பெறப்போகும் லட்சக்கணக்கான குடும்பங்கள், அடுத்த கட்டமாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தடையின்றி விண்ணப்பிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com