வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு ‘Good News’- புதிய விதிமுறைகள் வந்தாச்சு..யாரெல்லாம் பின்பற்ற வேண்டும்?

New Rent Agreement Rules
New Rent Agreement Rules
Published on

இந்தியாவில் எந்த ஊரில் வசிப்பவர்களாக இருந்தாலும் எந்த காலத்திற்கும் பொதுவான பிரச்சனையாக இருப்பது வாடகைக்கு வீடு கிடைப்பது தான். வீட்டை வாடகைக்கு எடுக்கும் போது வீட்டின் சொந்தக்காரர் போடும் கண்டிஷன்கள் சொல்லி மாளாது. சில சமயங்களில் வாடகைக்கு குடியிருப்பர்களிடம் மாட்டிக்கொண்டு பரிதவிக்கும் வீட்டு உரிமையாளர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் பார்க்கும் போது வெவ்வேறு ஊர்களில் இருந்து வேலை செய்வதற்காக வருபவர்களும், படிக்க வருபவர்களும் தான் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது அதிகம். அந்த வகையில் வாடகைதாரருக்கும், வீட்டின் சொந்தக்காரருக்கும் இடையே பிரச்சனைகள் பல காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதற்கு இதுவரை தீர்வு கிடைக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் வாடகை ஒப்பந்தம் குறித்து சரியாக பதிவு செய்யப்படுவதில்லை, notes period சரியாக கொடுப்பதில்லை, வாடகையை அடிக்கடி உயர்த்துகிறார்கள், வீட்டு அட்வான்ஸ் அதிகமாக கேட்கிறார்கள் என்பது போன்ற பல குற்றசாட்டுகள் பல காலமாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்!
New Rent Agreement Rules

அதாவது ஒவ்வொரு ஊரிலும், அந்த ஊருக்கு ஏற்ற மாதிரியான பிரச்சனைகள் இருந்து கொண்டேஇருக்கிறது. இதற்கு சரியான விதிமுறைகள் இல்லாத காரணத்தால் வீட்டு உரிமையாளர்கள் அவர்களாகவே சில விதிமுறைகளை வைத்துகொண்டு வாடகைக்கு குடியிருப்பவர்களை கஷ்டப்படுத்திக்கொண்டு இருந்தனர்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு தான் மத்திய அரசு 2025ம் ஆண்டுக்கான புதிய வாடகைச் சட்டத்தின்கீழ், வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்திருக்காங்க..

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2025-ம் ஆண்டின் வாடகை விதிமுறைகள் என்னென்ன சொல்லுது, இதில் என்னென்ன நடைமுறைகள் இருக்கு வாடகைதாரர் மற்றும் வீட்டின் உரிமையாளருக்கு என்ன விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

* முன்னதாக வாடகை விதிமுறைகளின் படி பதிவு செய்யப்படாத RENTAL AGREEMENT செல்லும் என்று தான் இருக்கும். ஆனால், இனி அவ்வாறு செல்லாது. இதற்கு மேல் போடும் RENTAL AGREEMENT பதிவு செய்யப்படவில்லை என்றால் அது செல்லாது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இருவரின் உரிமைகளையும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும்.

* புதிய விதிமுறைகளில் படி, இனிமேல் எல்லா வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். அதேபோல் 11 மாதங்களுக்கு மேல் இருக்கும் RENTAL AGREEMENTகளுக்கு இந்த டிஜிட்டல் முத்திரை கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டுமே ஒப்பந்தம் சட்டபூர்வமான செல்லுபடியாகும். பதிவு செய்யப்பட்டாத எந்த ஒரு சொத்தையும் வாடகைக்கு விடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த விதிமுறையை மீறினால் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டம் இந்தியா முழுவதும் பொருந்தும்.

* security deposit என்பது வாடகைதாரரிடம் வீட்டின் உரிமையாளர் கேட்கும் தொகையாகும். வீட்டின் உரிமையாளர்கள் 6 மாதத்திலிருந்து 12 மாத வாடகை தொகையை security deposit ஆக கேட்கின்றனர். தற்போது வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி மெட்ரோ சிட்டியாக இருந்தால் 2 மாத வாடகை தொகையை security deposit ஆக வாங்கலாம் என்றும் மெட்ரோ சிட்டியாக இல்லாத பட்சத்தில் 3 மாத வாடகையை security deposit ஆக வாங்கலாம். அதற்கு மேல் வாங்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

* அடிக்கடி வாடகையை உயர்த்தும் வீட்டின் உரிமையாளருக்கும் அரசாங்கம் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் 5ல் இருந்து 7 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

* வாடகைதாரர் வீட்டை காலி செய்யும் போது Notes period மூன்று மாதங்களாவது கொடுக்க வேண்டும். 3 மாதத்திற்கு குறைவாக கொடுக்கக்கூடாது எனறு கூறப்பட்டுள்ளது.

* அதேபோல் terms and conditions எல்லாமே, அதாவது Maintenance charge, வாடகை உயர்வு அதாவது எத்தனை மாதத்திற்கு ஒரு முறை வாடகை உயர்வு, வாடகைத் தொகை, பாதுகாப்பு வைப்புத்தொகை, கால அளவு மற்றும் அறிவிப்புக் காலம் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் RENTAL AGREEMENT-ல் குறிப்பிட வேண்டியது கட்டாயம். இதன் மூலம் வாடகைதாரருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையே ஒரு வெளிப்படை தன்மை இருக்கும். இந்த RENTAL AGREEMENT-ஐ டிஜிட்டலில் பதிவும் செய்ய வேண்டும்.

புதிய வாடகை விதிமுறைகளின்படி, இனிமேல் வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையே இருந்த RENTAL AGREEMENT-வெறும் ஒப்பந்தமாக மட்டும் இல்லாமல் standardized contract மாதிரி எல்லா terms and conditions எல்லாவற்றையும் தெளிவாக குறிப்பிடுவதன் மூலம், இருவருக்கும் இடையே ஒரு வெளிப்படையான தன்மையை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

* பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது. சர்ச்சைகள் ஏற்படும்போது, பதிவு செய்யப்பட்ட ஆவணம் நீதிமன்றத்தில் ஒரு செல்லுபடியாகும் ஆதாரமாக செயல்படும்.

இதையும் படியுங்கள்:
வாடகை வீட்டில் இருக்கீங்களா? வீட்டு ஓனர் உங்களை ஏமாற்ற முடியாது!
New Rent Agreement Rules

இந்த மாற்றங்களை தீவிரமாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த புதிய சட்டம், வீட்டு உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் வாடகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com