உஷார் மக்களே! தேர்வில் பாஸ் செய்தாலும் வேலை கிடையாது! வங்கித் தேர்வர்களுக்கு வந்த புதிய 'செக்'

Bank Job - CIBIL - Credit score
Bank Job - CIBIL - Credit score
Published on

பொதுத்துறை வங்கிகளில் (PSU Banks) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் சிபில் ஸ்கோர் (CIBIL - Credit score) சீராக, நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிக அவசியமாகப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி (Pankaj Chaudhary) தெரிவித்துள்ளார்.

தேர்வர் கடனாகப் பெற்ற பணத்தை சரியாக திருப்பி செலுத்துவார்களா என்பதை காட்டும் மதிப்பெண் தான் சிபில் ஸ்கோர் (CIBIL score). இது 2024 - 2025 மற்றும் 2025 - 2026 காலகட்டத்தில் வங்கித் தேர்வுகளில் முக்கிய விதியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் தேர்வில் வெற்றி பெற்று வங்கியில் வேலையில் சேரும் நேரத்தில் தான் தேர்வரின் கிரெடிட் ஸ்கோர் சரிபார்க்கப்படுகிறது என்றும் குறைந்த சிபில் ஸ்கோர் கொண்டவர்களின் பணி வாய்ப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது வங்கித் தேர்வெழுத தயாராகி வருபவர்கள் கவனத்தை கவர்ந்து எச்சரிக்கை தந்துள்ளது.

கீழ் வரும் முக்கிய காரணங்கள் அடிப்படையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

வங்கியில் வேலை செய்வோர் பணம் மற்றும் கடன் தொடர்பான பணிகளை கவனிப்பதால், அவர்களின் தனிப்பட்ட கடன் வரலாறு (personal credit history) மூலம் நிதி பொறுப்புணர்வு மற்றும் நிதி ஒழுக்கம் சரிபார்க்கப்படுகிறது.

கடன் திருப்பிச் செலுத்தாத வரலாறு (Loan default history) ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதாவது முன்பு வங்கிகளில் கடன் பெற்று அதை சரியாக கட்டாமல் இருந்தால் பணியின் போதான சரிபார்ப்பு (Recruitment verification) போது கேள்விகள் எழலாம்.

பின்னணி சரிபார்ப்பில் (Background verification) கடன் குறித்த விபரங்களை (credit report) பார்க்கலாம். சில PSU வங்கிகள் Document verification போது CIBIL report கேட்கும் வாய்ப்பு உள்ளது.

அதிக தனிப்பட்ட கடன் இருந்தால் ஆபத்து காரணமாக நிதி அழுத்தம் (Risk factor financial stress) ஏற்படும் என்பதால் எதிர்மறை காரணி (negative factor) ஆக கருதப்படலாம்.

இது மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. ஆபத்தான மோசடி மதிப்பீடு நிதி பிரச்சினைகள் (Fraud risk assessment financial problems) உள்ளவர்கள் மோசடிகள் (fraud) செய்ய வாய்ப்பு அதிகம் என்ற இடர் மதிப்பீடு (Risk assessment) காரணமாக இந்த சிபில் ஸ்கோர் பார்க்கப்படுகிறது.

நல்ல CIBIL score என்பது எவ்வளவு இருக்க வேண்டும்?

  • 750 மற்றும் அதற்கு மேல் மிகவும் நல்லது எனவும்.

  • 700 லிருந்து 750 வரை ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் (Acceptable).

  • 650 லிருந்து 700 வரை மேலும் உயர (Improve) வேண்டும் எனவும்.

  • 650 கீழ் என்றால் பாதிப்பு (Problem) ஆகலாம்.

எனவும் வங்கி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதை எப்படி 750-க்கு மேல் உயர்த்துவது?

  • மேலும் தவணையை தாமதம் (EMI / credit card bill late) ஆகாமல் கட்டுவது,

  • குறைவான தவணை (Minimum due) மட்டும் இல்லாமல் அசல் சேர்த்து முழுதும் (Full amount) கட்டுவது,

  • குறிப்பாக தேவையில்லாமல் அதிக கடன் (Loan) எடுப்பதை தவிர்ப்பது,

  • கிரெடிட் கார்டு தொகை (Credit card limit) முழுவதும் பயன்படுத்தாமல் இருப்பது,

  • கடன் ரிப்போர்ட் (Credit report) வருடத்திற்கு ஒரு முறை செக் செய்வது.

ஆகிய 5 வழிகள் CIBIL score நல்ல நிலையில் வைத்திருக்க உதவும் என்கின்றனர்.

வங்கித் தேர்வர்கள் இதை நிச்சயமாக கவனத்தில் கொண்டு நல்ல வேலை வாய்ப்பை உடனே பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com