

தமிழக சட்டசபை கடந்த மாதம் 5-ம்தேதி தொடங்கிய நிலையில் இன்று வரை தினமும் துறைவாரியாக மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள், நடைபெற்று வரும் நிலையில், இதில் புதிய அறிவிப்புகளும் வெளியிபிடப்பட்டு வருகிறது.
இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாட்டிற்கு சென்னையில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள தலைமைச் செயலகம் 2 கட்டடங்களில் இயங்கி வருகிறது. 2 கட்டிடங்களில் 6000 பேர் பணியாற்றும் நிலை உள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் 30க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படுகின்றன.
அதிகாரிகளின் எண்ணிக்கையும் பொறுப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் தமிழக முதலமைச்சர் விஜய் கூறினார்.