News 5 – (13.08.2024) ஒரு பில்லியன் Followers சாதனை!

News 5
News 5

1. பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு!

Russian President Putin invited Prime Minister Modi!
Putin with Modi

இந்தியா - ரஷ்யா இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த மாதம் 22ம் தேதி ரஷ்யாவின் நகரான கஸனில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ள புதின், பிரதமர் மோடியை ‘நல்ல நண்பர்’ என்று குறிப்பிட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யாவில் புதினை சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2. குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறுகிறது!

TNPSC
TNPSC

தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறுகிறது. வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு சுமார் 8 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

3. மின் விநியோகம் பாதிக்கப்பட்டதன் காரணம்?

chennai power cut
chennai power cut

சென்னை அருகே அலமாதி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், மாநகரின் பல்வேறு இடங்களில்  நேற்று இரவு மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மின் துறை ஊழியர்கள் பிரச்னையை சரிசெய்த நிலையில், சில மணி நேரங்களில் மின் விநியோகம் சீரானது.

இதையும் படியுங்கள்:
ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆதாரத்துடன் கண்டுபிடிக்க தயாராகும் நாசா!
News 5

4. மாமன்னனை அடுத்து 'மாரீசன்!’

'Marison' Movie
'Marison' Movie

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான, 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் வடிவேலு 'மாரீசன்' என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

5. ஒரு பில்லியன் Followers சாதனை!

Christiano Ronaldo.
Christiano Ronaldo.

இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மொத்தமாக ஒரு பில்லியன் Followerகளை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

logo
Kalki Online
kalkionline.com