News 5 - (22.10.2024) 'அமரன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு!

News 5
News 5
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

1. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்திய அரசு!

Help India for palastin
Help India for palastin

பாலஸ்தீனத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்திய அரசு. ஐக்கிய நாடுகள் சபை மூலமாக முதற்கட்டமாக 30 டன் அளவுக்கு அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

2. குழந்தைகள் காணாமல் போனால் கண்டுபிடிக்க புதிய திட்டம்!

Arun IPS
Arun IPS

தீபாவளி புத்தாடை வாங்க வரும் கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போனால் கண்டுபிடிக்க புதிய திட்டமும், மக்கள் கூட்டத்தில் பழைய குற்றவாளிகள் ஊடுருவினால் கண்டுபிடிக்க FRS தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். தியாகராய நகரில் புதிய சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தப் பின் செய்தியாளர்களிம் பேசிய அவர், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

3. சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

Rain
Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பெருநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
News 5 - (22.10.2024) தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள்!
News 5

4. 'அமரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு!

AMARAN Making In Action
AMARAN Making In Action

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியாகவுள்ள 'அமரன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படக்குழு அறிவித்துள்ளது.

5. காமன்வெல்த் போட்டிகளில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்!

Cricket
Cricket

2026ம் ஆண்டில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி மற்றும் மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. நிதி சிக்கன நடவடிக்கையாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நீக்கியதாக காமன்வெல்த் விளையாட்டு கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.