News 5 - (23.10.2024) ‘சமூக வலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகின்றன’: மத்திய அரசு!

News 5
News 5
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

1. கமலா ஹாரிஸுக்கு தேர்தல் நிதியாக பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் நன்கொடை!

Bill Gates, Kamala harish
Bill Gates, Kamala harish

கமலா ஹாரிஸுக்கு தேர்தல் நிதியாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ‘இந்தத் தேர்தல் வித்தியாசமானது என்றும் அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிப்பதாகவும்’ பில் கேட்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

2. ‘சமூக வலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகின்றன’: மத்திய அரசு!

Central government
Central government

கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், அதனைக் கையாண்ட முறைக்காக எக்ஸ் மற்றும் மெட்டா வலைதளங்களை கடுமையாக சாடியது மத்திய அரசு. ‘சமூக வலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகிறது’ என்றும் மத்திய அரசு விமர்சித்துள்ளது.

3. இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

Strom alert
Strom alert

சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புதிய புயல் சின்னம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
News 5 - (23.10.2024) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்!
News 5

4. இன்று வெளியாகிறது ‘அமரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!

AMARAN Making In Action
AMARAN Making In Action

‘அமரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், தமிழில் கமல்ஹாசன், தெலுங்குவில் நானி, இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சிவராஜ் குமார், மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஆகியோர் இந்த டிரெய்லர் காட்சிகளை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. எம்.எஸ்.தோனியுடன் சிஎஸ்கே அணி நிர்வாகம்!

MS Dhoni
MS Dhoni

எம்.எஸ்.தோனியுடன் சிஎஸ்கே அணி நிர்வாகம் வரும் 29 அல்லது 30ம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.