News 5 – (25.09.2024) ரஷ்யா தோல்வி; உக்ரைனுக்கு துணை அமெரிக்கா!

News 5
News 5

1. ‘ரஷ்யா தோல்வி; உக்ரைனுக்கு அமெரிக்கா துணை’  - அதிபர் ஜோ பைடன்!

Russia, Ukraine, USA
Russia, Ukraine, USA

ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான போர் இரண்டு வருடங்களாக நீடித்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்க நாடு உக்ரைனுக்கு பக்கபலமாக இருப்பதாகக் கூறியிருந்தது. அந்த வகையில் இன்று, ‘உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் தொடுத்த போர் தோல்வி அடைந்ததாக‘ அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், ‘போரில் உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவின் நேட்டோ கூட்டமைப்பு உக்ரைனுக்கு துணை நிற்கும்’ என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

2. நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MK stalin
MK stalin

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரிக்கைகளுக்காக செப்டம்பர் 26, 27 ஆகிய இரு நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, மத்திய அரசு தர வேண்டிய நிதியைப் பெற வலியுறுத்தவிருப்பதாகத் தெரிகிறது.

3. உருளைக்கிழங்கு கழிவுகளை எத்தனாலாக மாற்றும் சோதனை!

 convert potato waste into ethanol
convert potato waste into ethanol

உருளைக்கிழங்கு கழிவுகளை எத்தனாலாக மாற்றும் சோதனை முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கு அதிகம் விளையும் உத்தரப் பிரதேசம் அல்லது மேற்கு வங்க மாநிலத்தில் ஆலை அமைக்கத் திட்டமிடப்பட்டு இந்த சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
News 5 – (24.09.2024) சேம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் AK!
News 5

4. ‘BLACK படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்’ - படக்குழு அறிவிப்பு!

Jeeva black movie
Jeeva black movie

பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நடிகர் ஜீவா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கும், ‘BLACK’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அப்படக்குழு அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்ற 3 வீரர்களுக்கு முதலமைச்சர் பரிசு!

Chief Minister's gift to 3 players who won gold medals in Chess Olympiad
Chess Olympiad players

ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர்களுக்கு (குகேஷ், பிரஞ்ஞானந்தா, வைஷாலி) மற்றும் அணி தலைவர் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகையாக 90 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி பாராட்டி உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com