News 5 – (30.09.2024) வெயில் கொளுத்தும் நிலையில், மழைக்கு வாய்ப்பு!

News 5
News 5

1. லெபனானையும் தாக்கும் இஸ்ரேல்!

Israel will attack Lebanon
Israel will attack Lebanon

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2. மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: இன்று விசாரணை!

In West Bengal doctors
In West Bengal doctors

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கு இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் மேற்கு வங்க மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே 40 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் செப்டம்பர் 21 அன்றுதான் பணிக்கு திரும்பினர். இந்நிலையில், நேற்று இரவு மேற்குவங்க அரசு மருத்துவமனைகளின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள், பொதுமக்கள் இணைந்து பல இடங்களில்  மெழுவர்த்தி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

3. வெயில் கொளுத்தும் நிலையில், மழைக்கு வாய்ப்பு!

Rain
Rain

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், இன்று ஓரிரு இடங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேர வெப்பநிலை, 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரையில் பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தற்போது சென்னையில் வெயில், கொளுத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்:
News 5 – (28.09.2024) ‘வானில் இரண்டு நிலவுகள்’ - நாசா அறிவிப்பு!
News 5

4. 'மெய்யழகன்' திரைப்படத்தின் 3 நாள் வசூல்!

Meiyazhagan
Meiyazhagan

'96' படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் பிரேம் குமார். தற்போது இவர் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்துள்ள திரைப்படம் 'மெய்யழகன்.' இப்படத்தில் கார்த்தி - அரவிந்த் சாமி இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மனித உணர்வுகளை குறித்துப் பேசும் இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சிலர் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும் உலகளவில் கடந்த 3 நாட்களில் 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது இந்தத் திரைப்படம்.

5. இந்தியா - வங்கதேசம் 2வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டமும் மழையால் ரத்து!

3 day cricket test match canceled
cricket ground

இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையேயான 2வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில். இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள்ஆட்டமும் மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com