
தென்னிந்தியாவின் பிரம்மாண்டமான ஆட்டோமேஷன் கண்காட்சி சென்னையில் நடக்கிறது.
மும்பையில் பல வருடங்களாக ஆட்டோமேஷன் எக்ஸ்பொ என்ற தொழிதுறைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை ஐ.ஈ.டி.கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி மீண்டும் இந்த வருடம் மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதிவரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
சென்னை, தொழில்துறை வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப புதுமைக்கும் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. எனவே, இந்த கண்காட்சி தொழில்துறை நிபுணர்களுக்கு ஆழ்ந்த இணைப்பு, அறிவுப் பகிர்வு, மற்றும் வணிக விரிவாக்கம் ஆகியவற்றிற்கான ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக தமிழக மாநில சிறு, குறுந்தொழில்கள் துறை அமைச்சர் திரு. டி.எம். அன்பரசன், சிறப்பு விருந்தினராக தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர், MSME துறை, டாக்டர். அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ். ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
ஐ.ஈ.டி. கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆரோக்கியசாமியிடம் இந்த ஆண்டு ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?” என்று கேட்டபோது,
"ஏ.ஐ மற்றும் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம், தொழிற்சாலை மற்றும் செயல்முறை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் நிகழும் மாற்றங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். காணலாம். மேலும், சிறு, குறுந்தொழில்கள், ஸ்டார்ட்அப்கள், மற்றும் தொழில் தலைவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள இக்கண்காட்சி ஓர் அரிய வாய்ப்பு” என்று கூறினார்.
மேலும் அவர் கூறிய தகவல்களாவன:
"6 மார்ச் – சி ஈ ஓ கனெக்ட் : ஏ.ஐ, ரோபாட்டிக்ஸ், மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் தலைமைத்துவம் எவ்வாறு முன்னேற்றம் அடைகிறது என்பதற்கான கருத்தரங்கு.
7 மார்ச் – செயல்முறை & வால்வ் ஆட்டோமேஷன் மாநாடு: ஏ.ஐ, IIoT, மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் தொழில்துறையில் ஆட்டோமேஷனை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை அறியலாம்.
7 மார்ச் – தொழிற்சாலை ஆட்டோமேஷன் & ரோபாட்டிக்ஸ் மாநாடு: ரோபாட்டிக்ஸ், ஏ.ஐ, மற்றும் இயந்திர காட்சி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் எவ்வாறு புதுமையான தொழிற்சாலைகளை உருவாக்குகின்றன என்பதை அறியலாம்.
8 மார்ச் – "Back to Basics" அடிப்படை ஆட்டோமேஷன் பயிற்சி: கட்டுப்பாட்டு அமைப்புகள், சைபர் பாதுகாப்பு, காப்பாற்றல் பகுதிகள், மற்றும் கட்டுப்பாட்டு வால்வுகள் குறித்த விரிவான பயிற்சி.
10,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அரங்குகளில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 300க்கும் அதிகமான பிரபல நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அடுத்த தலைமுறை ஆட்டோமேஷன் தொழில் நுட்பங்களின் நேரடி விளக்கங்கள் பெற இது ஒரு அறிய வாய்ப்பு” என்று குறிப்பிட்டார்.