வாகன ஓட்டிகளே உஷார்..!இன்சூரன்ஸ் இல்லாமல் டோல்கேட்டை தாண்டினால் SMS வரும்! பிறகு ரூ.10,000 அபராதம்.!

வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் டோல்கேட் கடந்தால் SMS வரும். புதிய சோதனைத் திட்டம் மற்றும் ரூ.10,000 அபராத விதிகள் குறித்த முழு விவரம்.
டோல்கேட் மாற்றம்
டோல்கேட் மாற்றம்
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

சுங்கச் சாவடிகளில் தற்போது நிறைய விதிமுறை மாற்றங்கள் வந்துவிட்டன. அதன்படி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய தானியங்கி எச்சரிக்கை முறையைச் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நம்முடைய வாகனம் சுங்கச் சாவடியைக் கடக்கும்போது, அதன் பதிவு எண் மற்றும் ஃபாஸ்டேக் (FASTag) விவரங்கள் மத்திய அரசின் வாஹன் (VAHAN) தரவுத்தளத்துடன் தானாகவே ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும்.

வாகனத்தின் மூன்றாம் தரப்பு காப்பீடு (Third-party insurance) திட்டம் காலாவதியாகிவிட்டாலோ அல்லது வாகனத்திற்குக் காப்பீடு இல்லாவிட்டாலோ, சுங்கச் சாவடியைக் கடந்த சில நிமிடங்களில் வாகன உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும்.

இந்த குறுஞ்செய்தியில் வாகனப் பதிவு எண், சுங்கச்சாவடியைக் கடந்த தேதி மற்றும் துல்லியமான நேரம், மற்றும் காப்பீடு காலாவதியாகும் விவரம் ஆகிய மூன்று முக்கியமான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், அபராதத்தைத் தவிர்க்க காப்பீட்டு பாலிசியைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு உரிமையாளருக்கு நினைவூட்டலும் வழங்கப்படும்.

சுங்கச் சாவடியில் அனுப்பப்படும் இந்த SMS ஒரு விழிப்புணர்வு (டோல்கேட் SMS) எச்சரிக்கை மட்டுமே என்று NHAI தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் சுங்கச் சாவடியிலேயே தானாக அபராதம் (E-Challan) விதிக்கப்படாது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளையும் அபராதங்களையும் எதிர்கொள்வதைத் தவிர்க்க, வாகன உரிமையாளர்கள் தங்கள் காப்பீட்டைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டுவதே இதன் நோக்கம் ஆகும். வாகன உரிமையாளர்கள் தங்கள் காப்பீட்டை உரிய நேரத்தில் புதுப்பித்து, பெரும் அபராதங்களைத் தவிர்ப்பதை உறுதிசெய்ய, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

டோல்கேட் SMS
டோல்கேட் SMS

மேலும் காப்பீடு செய்யப்படாத வாகனங்கள், குறிப்பாக அவை சாலை விபத்துகளில் சிக்கும்போது, ​​பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெறுவதற்கான வழிகள் குறைவாக இருப்பதால், அவை ஒரு பெரும் கவலையாக நீடிக்கின்றன.

எனவே, வாகன உரிமையாளர்களைத் தங்கள் காப்பீட்டை உரிய நேரத்தில் புதுப்பிக்கத் தூண்டுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

இதையும் படியுங்கள்:
ஜூலை 1 முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு!
டோல்கேட் மாற்றம்

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி (பிரிவு 196) காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் பொதுச் சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வாகனமும் செல்லுபடியாகும் மூன்றாம் தரப்பு காப்பீட்டைக் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். சாலை விபத்து ஏற்படும் பட்சத்தில் ஏற்படும் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டு கோரிக்கைகளிலிருந்து இந்தக் காப்பீடு பாதுகாப்பு அளிக்கிறது.

போக்குவரத்து காவல்துறையினரால் பிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.5,000 (அல்லது அடிப்படை பிரீமியத்தில் 3 மடங்கு) வரையும், இரண்டாவது அல்லது அடுத்தடுத்த முறை தவறு செய்து பிடிபட்டால், அபராதம் அடிப்படை பிரீமியத்தின் ஐந்து மடங்கு அல்லது ரூ.10,000, இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும்.

தற்போதைக்கு, இந்த முன்னோட்டத் திட்டம் ஒரு சுங்கச்சாவடியில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. அதாவது, இந்தத் திட்டம் தற்போது டெல்லியின் அர்பன் எக்ஸ்டென்ஷன் ரோடு-II (UER-II) பகுதியில் உள்ள முண்ட்கா (Mundka) சுங்கச் சாவடியில் மட்டுமே சோதனை (Pilot Project) அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சுங்கச் சாவடி கட்டணம்; இன்றுமுதல் உயர்வு!
டோல்கேட் மாற்றம்

இந்தச் சோதனை வெற்றி பெற்ற பிறகு, இதனை நாடு முழுவதும் உள்ள மற்ற சுங்கச் சாவடிகளுக்கும் விரிவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பரிசீலித்து வருகிறது.