
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், பிரபல தொழிலதிபராகவும் வலம் வருகிறார். இவரது மனைவி நீடா அம்பானி இவரது ஆடம்பரமான வாழ்க்கையின் மூலம் அடிக்கடி இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருபவர்.
அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார்வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
பேஷன்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற நீதா அம்பானி எப்போதும் அவருடைய ஆடை மற்றும் அணிகலன்களால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். நீடா அம்பானி பெரும்பாலும் விலை மதிப்புள்ள பொருட்களையே விரும்புவார். அதேபோல் இவர் ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்த நகையை மற்றொரு நிகழ்ச்சிக்கு அணியமாட்டார்.
தான் பயன்படுத்தும் பொருட்களில் தனித்துவம் இருப்பதையும் அவர் விரும்புவாராம். இவர் பயன்படுத்தும் வெளிநாட்டு பிராண்டட் பைகள், செருப்புகள், பர்ஸ்கள் என அனைத்திலும் ஆடம்பரம் தெரியும். இவ்வளவு ஏன் நீடா தினமும் குடிக்கும் டீயின் விலையே பல லட்ச ரூபாயாம்.
அந்த வகையில் நீடா அம்பானி, பேஷன்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். வணிகத்தில் அவரது திறமையான செயல்பாடுகள் கவனம் பெற்றுள்ளன. அவர் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்களும் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகத் தவறவிடுவதில்லை.
அந்தவகையில் தற்போது, மும்பையில் உள்ள பிரபல தொழில் அதிபரும் இந்திய ஆடை வடிவமைப்பாளருமான மணிஷ் மல்கோத்ராவின் வீட்டில் நடந்த தீபாவளி விருந்தில் நீதா அம்பானி கட்டி வந்த புடவை தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
மணிஷ் மல்கோத்ராவின் வீட்டில் நடந்த தீபாவளி விருந்தில் நீதா அம்பானி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நீடா அம்பானி விலை உயர்ந்த வெள்ளி ஜரிகையால் கலைநயத்துடன் நெய்த சேலையும், காதில் கண்ணைப்பறிக்கும் பெரிய மரகத காதணிகள் மற்றும் கையில் விலை உயர்ந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஒன்றை வைத்திருந்தார்.
பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கண்கவர் உடையணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், நீடா அம்பானி அணிந்திருந்த வெள்ளி ஜரிகை சேலையையும், கைப்பையும் தான் அனைவரும் பிரமிப்பாக பார்த்தனர். அத்துடன் அந்த சேலைக்கு பொருத்தமாக அவர் கையில் வைத்திருந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஆடம்பரமாக ஜொலித்தது. இது போன்ற விலை உயர்ந்த பைகள் உலகில் 3 பேரிடம் மட்டுமே உள்ளது. அதில் நீடா அம்பானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பையின் விலையை கேட்டால் தலையே சுற்றும். அந்த பையின் விலை தோராயமாக இந்திய விலையில் ரூ.17 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரத்து 200 (ரூ.17,73,24,200) ஆகும். இவ்வளவு விலைமதிப்புள்ள அந்த கைப்பையில் அப்படி என்ன விசேஷம் என்றால் அதில் 3 ஆயிரத்து 25 வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது என்பது தான்.
நீடா அம்பானி வெள்ளி ஜரிகை புடவையில் கையில் வைர கற்கள் மின்னும் கைப்பையுடன் வலம் வரும் படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து பெருமூச்சு விட்டு வருகின்றனர்.