போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு.! டிஜிபி போட்ட ஆர்டரால் கலக்கத்தில் காவலர்கள்.!

No leave for police officers
Police
Updated on

தமிழ்நாடு, அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 4-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அன்று அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 2-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, காவலர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி அதிரடிவு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றார். இதற்கு முன்பு தமிழ்நாடு காவல் அகாடமியின் டிஜிபியாகவும் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வருகின்ற மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பபட உள்ள நிலையில், காவலர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவே, டிஜிபி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

னஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வருகின்ற மே 4-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் வருகின்ற மே 2-ம் தேதி முதல் காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்கக் கூடாது.

இப்போது விடுப்பில் உள்ள காவலர்கள் அனைவரும் மே 2-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மருத்துவ விடுப்பு மற்றும் கல்வி விடுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது” என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் படம் பார்த்த ஊழியர் கைது.!
No leave for police officers

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், எப்படி வாக்குகளை எண்ண வேண்டும் என அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 29) சென்னை கலைவாணர் அரங்கில் பயிற்சி அளிக்கிறது.

நாளை (ஏப்ரல் 30) சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பிலும் வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் உள்பட, தபால் வாக்குகளை எண்ணுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
இளநீர் குடிக்கணும்னா இனி யோசிக்கனும் போல.. கிடுகிடுவென உயர்ந்த விலை..!!
No leave for police officers
logo
Kalki Online
kalkionline.com