துணி துவைக்கும் கவலை இனி இல்லை!

துணி துவைக்கும் கவலை  இனி இல்லை!
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனைப் பெற்றவர்களை சிறைகளில் அடைப்பது வழக்கம். அப்படி கைதிகளை அடைப்பதற்கென்று  தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இச்சிறைகளில் சுமார் 10,000த்து க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் துணி துவைப்பது முதல் அவரவரின் வேலைகளை அவரவர்களே  செய்து கொள்வார்கள். இவர்களின் பயன்பாட்டிற்காக திருச்சி சிறையில் 30 கைதிகள் தயாரிக்கும் காந்தி  சோப்பு மாதம் தோறும் 4 வழங்கப்படுகிறது. இவைகளுடன் எண்ணெய் தேய்த்து குளிக்க உதவியாக நல்லெண்ணெய், பல் தேய்க்க பல்பொடி ஆகியவையும்  வழங்கப்படுகிறது. காந்தி பார் சோப்பை வைத்து அவர்களின் துணியை அவர்களே துவைத்து கொள்கின்றனர்.

இந்த நிலையில்  கைதிகளின் துணிகளை துவைக்க பெரிய அளவிலான வாஷிங் மெஷின் வாங்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரே நேரத்தில் 100 கிலோ துணி துவைக்கும் வகையில் உள்ள இவை விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது இது குறித்து சிறை அதிகாரிகள் கூறும்போது “சிறையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைக்குள்  கொண்டு வருவதை தடுக்கும் வகையில் ஸ்கேனர் வாங்கப் பட்டுள்ளது. தற்போது கைதிகளின் நலனை கருத்தில் கொண்டு வாஷிங் மெஷின் வாங்கப்பட்டுள்ளது. இவை விரைவில் கைதிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்றனர்.

வெளியில் உள்ள பலர் வேண்டுமென்றே குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்ல அஞ்சுவதில்லை. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பதுடன் இனி இம்மாதிரி வசதிகளும் சிறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம். எனினும் கைதிகளுக்காக வாஷிங் மெஷின் வாங்குவது என்பது வயது முதிர்ந்த சிறைவாசிகளுக்கு பயனுள்ளத்தாக இருக்கும் என்பதும் உண்மைதான்.