

நாடு முழுவதும் குழாய் மூலம் எரிவாயு (PNG) இணைப்பைப் பெற்றவர்கள், தங்களிடம் உள்ள எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்புகளை உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குழாய் எரிவாயு இணைப்பு பெற்ற குடியிருப்புகளுக்கு இனி புதிய சிலிண்டர் விநியோகம் கிடையாது எனப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.
குழாய் எரிவாயு இணைப்பு (PNG – Piped Natural Gas) என்பது, சிலிண்டர் மூலம் அல்லாமல் நேரடியாக வீட்டிற்குக் குழாய் வழியாக வழங்கப்படும் இயற்கை எரிவாயு ஆகும். இது பெரிய பைப்லைன்கள் மூலம் நகரங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சிறிய குழாய்கள் வழியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. வீடுகளில் இதற்காகத் தனி எரிவாயு மீட்டர் (Gas Meter) மற்றும் ரெகுலேட்டர் பொருத்தப்படும். இது சிலிண்டரை விடப் பாதுகாப்பானது என்பதால், தற்போது பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், LPG Gas supply பிரச்சினை காரணமாக PNG (Piped Natural Gas) இணைப்புகள் குறித்து வந்துள்ள அரசு நடவடிக்கையாகவே இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியானது. இது முழுமையான தடை அல்ல என்றாலும் மேற்கு ஆசிய (Middle East) பகுதியில் நடந்த போர் காரணமாக பாதிக்கப்பட்ட சிலிண்டர் விநியோகத்தை கட்டுப்படுத்தவே சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிலர் இரண்டு இணைப்புகள் வைத்ததால் ஏறாபட்ட சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தடுக்கவே இந்த விதிமுறைகளை அரசு விதித்துள்ளது.
குறிப்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி PNG (Piped Natural Gas) இணைப்பு உள்ளவர்கள் LPG சிலிண்டர் வைத்திருக்க முடியாது. புதிய LPG connection கிடைக்காது. முக்கியமாக இரண்டும் உள்ளவர்கள் LPG இணைப்பை உடனடியாக ஒப்படைக்க (surrender) வேண்டும் .
ஒரே வீட்டில் இருவகையான எரிவாயு இணைப்புகள் இருப்பது எரிபொருள் விரயம் ஏற்பட முக்கிய காரணம் என்றும் இதனால் தேவையுள்ளவர்களுக்கு கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு Gas விநியோகத்தை சமமாக்கும் நோக்கில் PNG இருக்கும் வீட்டுக்கு LPG தேவையில்லை என்பதால், PNG இல்லாதவர்களுக்கு சிலிண்டர் cylinder கிடைக்க அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு மக்களிடம் பாராட்டுகள் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பின் மூலம் பிளாக்கில் சிலிண்டர் விற்பனை தடுக்கப்படும்.
இந்த விதிகளை மீறுவோரின் சிலிண்டர் இணைப்புகள் நீக்கப்படும் என்றும் விநியோகஸ்தர்களும் இது குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. மக்கள் தேவைக்கு மேல் இருக்கும் எதையும் தவிர்த்தால் மட்டுமே இது போன்ற நெருக்கடிகளை சமாளிக்க அரசுக்கு உதவ முடியும்.
இந்த விதிகளுக்கு மாறாக, இரண்டு இணைப்புகளையும் வைத்திருப்போரின் சிலிண்டர் இணைப்புகள் ரத்து செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் சிலிண்டர் தேவைப்படும் சாமானிய மக்களுக்கு அது தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தங்களின் தேவைக்கு அதிகமான எரிவாயு இணைப்புகளைத் தவிர்ப்பதன் மூலம், இதுபோன்ற நெருக்கடி காலங்களில் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.