குட் நியூஸ்..! இனி பட்டா பெற வெறும் 15 நாட்கள் போதும்..!

patta
pattaimage source:oneindiatamil
Published on

பட்டா (Patta) என்பது நிலத்தின் உரிமையை (ownership) அரசு பதிவாக உறுதி செய்யும் முக்கியமான சட்ட ஆவணம். இது தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையால் வழங்கப்படுகிறது.

நிலம் உங்கள் பெயரில் இருப்பதை நிரூபிக்கும் வகையில் நில உரிமையாளர் பெயர் , பட்டா எண், கிராமம் மற்றும் தாலுக்கா பெயர், சர்வே எண் மற்றும் துணை பிரிவு எண், நிலத்தின் பரப்பளவு நில வகை (நஞ்சை / புஞ்சை / வீட்டு நிலம்) ஆகிய விபரங்கள் பட்டாவில் இருக்கும்.

பட்டா ஏன் முக்கியம்?

நிலம் விற்க அல்லது வாங்கவும், வங்கி கடன் பெறவும், அரசு நலத் திட்டங்கள் பெற சான்றாகவும், சட்ட பிரச்சினைகளில் புரூஃப் (proof) ஆகவும் பலவிதங்களில் பட்டாவின் (document) பயன்பாடு இருக்கும்.

பட்டாவின் வகைகள்:

நிலத்தின் தன்மைக்கு ஏற்ப பட்டாக்கள் மாறுபடுகின்றன:

  1. தனிநபர் பட்டா (Ryotwari Patta): ஒரு தனிநபரின் பெயரில் மட்டும் இருக்கும் நிலம்.

  2. கூட்டுப் பட்டா (Joint Patta): ஒரே நிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருப்பது.

  3. நத்தம் பட்டா (Natham Patta): குடியிருப்பு நிலங்களுக்காக வழங்கப்படுவது.

  4. தோராயப் பட்டா (Thoraya Patta): நில அளவைக்குப் பிறகு வழங்கப்படும் தற்காலிகப் பதிவு.

ஆன்லைன் (online) வசதி இல்லாத காலத்தில் இந்ந பட்டா வாங்கும் பழைய வழிமுறை (Old method for getting Patta) என்பது முழுக்க முழுக்க நேரடியாக வருவாய் அலுவலகங்களுக்கு பலமுறை அலைந்து செய்ய வேண்டியதாக இருந்தது. இதில் பலமுறை அலுவலகம் செல்ல வேண்டியதுடன் செயலாக்க நேரம் (Processing time) அதிகம். அத்துடன் நிலை சரிபார்ப்பு (Status check) செய்யும் வசதி இல்லாதது , கையேடு பதிவுகள் (Manual records ) காரணமாக தாமதம் போன்ற பல சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் ஆன்லைன் வசதிகள் பெருகி தமிழக அரசின் வருவாய்த்துறையில் பட்டா தொடர்பாக பெரிய டிஜிட்டல் மாற்றங்கள் தற்போது (2026) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நில உரிமையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் வேகமான மற்றும் வெளிப்படையான சேவை கிடைக்க தொடங்கியுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகம் போகாமலேயே பதிவு செய்த உடனே உங்கள் பதிவு 15 நாளில் பட்டா உங்கள் கையில் கிடைக்கும் என்ற தகவல் பட்டா வாங்க நினைப்பவர்களுக்கு இனிய செய்தியாக மகிழ்விக்கிறது.

புதிய முறைகளில் பழைய மேனுவல் கோப்புகள் முறை முற்றிலும் அகற்றப்பட்டு 100 சதவீதம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து நில அளவையாளரை (Surveyor) வரவழைத்து விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் பட்டா மாறுதல் ஆணை உறுதியாக பெறலாம். மேலும் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை உடனுக்குடன் SMS அப்டேட்: மூலம் மொபைலில் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை 15 நாட்களுக்கு மேல் ஒரு விண்ணப்பம் தேங்கிக் கிடந்தால், அது குறித்து மேலதிகாரிகள் நேரடியாகக் கேள்வி எழுப்பவும் இந்த புதிய சாப்ஃப்ட்வேர் வழிவகை செய்கிறது..

இதில் மற்றுமொரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்தத் திட்டம் மிக எளிமையான தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த டிஜிட்டல் வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் நில ஆவணங்களைச் சரியாகப் பராமரித்துக் கொள்ளுமாறு தமிழக அரசின் வருவாய்த்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

முன்பு தனித்தனியாக கிடைத்த பதிவேடு (A-Register) சிட்டா (Chitta),எஃப்.எம்.பி. ஸ்கெட்ச் (FMB sketch (field map)) ஆகிய அனைத்து விவரங்களும் ஒரே ஆவணத்தில் (Integrated Land Record) கிடைப்பது சிறப்பு.

அதிகாரிகளின் டிஜிட்டல் கையொப்பம் இட்ட பட்டாக்கள் மட்டுமே இனி செல்லுபடியாகும் என்பதால் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் குறைப்பு , நேரம் சேமிப்பு போன்றவை இந்த டிஜிட்டல் மாற்றங்களின் முக்கிய நோக்கமாகிறது.

இடைத்தரகர்கள் இல்லா, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு அரசால் எடுக்கப்பட்ட இந்த ஆன்லைன் பட்டா சேவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சேவையை தமிழ்நாடு e-services portal / Tamil Nilam portal மூலம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்: மார்ச் 31-க்குள் சொத்து வாங்குபவர்களுக்குப் பெரிய லாபம்!
patta

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com