பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்: மார்ச் 31-க்குள் சொத்து வாங்குபவர்களுக்குப் பெரிய லாபம்!

வரும் ஏப்ரல் 1 முதல் பத்திரப்பதிவு துறையில் சில அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு
Published on

தமிழகத்தில் நிலம் அல்லது வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் தங்கள் சொத்துக்களை விற்கக் காத்திருப்பவர்களுக்கும் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளனர். அதாவது ஏப்ரல் 1 முதல் பத்திரப்பதிவு துறையில் சில அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வரும் ஏப்ரல் 1-ம்தேதி முதல் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, முத்திரைத் தீர்வை போன்றவற்றில் சில திருத்தங்களை அரசு நடைமுறைப்படுத்த உள்ளதால், சொத்து பரிமாற்றம் செய்பவர்கள் தங்கள் பட்ஜெட்டில் பெரியளவில் கூடுதல் சுமையை ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முக்கியமாக, கடந்த சில வருடங்களாகவே மாற்றப்படாமல் இருந்த சில பகுதிகளின் வழிகாட்டி மதிப்பை நடப்பு சந்தை விலைக்கு நிகராக உயர்த்த தமிழக அரசு ஆலோசித்து வருவதால் வரும் மார்ச் 31க்குள் பத்திரப்பதிவு முடிப்பவர்களுக்கு பழைய கட்டணமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பத்திரப்பதிவு செய்பவர்கள், உயர்த்தப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசின் புதிய திட்டம் - இனி வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம்..!
பத்திரப்பதிவு

அரசின் இந்த மாற்றம் பெரியளவில் சொத்து வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் ஒரு சிறிய மற்றும் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நிச்சயமாக பெரிய சுமையையும், சேமிப்பில் பெரிய ஓட்டையையும் ஏற்படுத்தக்கூடும்.

அரசின் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு வரும் பத்திரப்பதிவு செய்பவர்கள் வரும் மார்ச் 31-ம்தேதிக்குள் அதாவது 7 நாட்களுக்குள் பத்திரப்பதிவை முடிப்பது லாபகரமானது.

இன்னொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், பட்டா மாறுதல் தொடர்பான ஆன்லைன் நடைமுறைகள் இந்த ஏப்ரல் முதல் மேலும் எளிமையாக்கப்பட உள்ளன. அதாவது இனிமேல் பத்திரப்பதிவு செய்தவுடனேயே தானியங்கி முறையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், பழைய வில்லங்கச் சான்றிதழில் (EC) ஏதாவது குளறுபடி இருப்பின் அதை சரிசெய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த தானியங்கி முறை கை கொடுக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சொத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் உங்கள் சொத்தின் விபரங்கள் கணினியில் சரியாகப் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதை இந்த ஒரு வாரத்திற்குள் சரிபார்த்துக் கொள்வதன் மூலம் பிற்காலத்தில் எந்தவிதமான சட்டச் சிக்கல்களும் வராமல் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அதேபோல், அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் வரன்முறைப்படுத்தப்படாத இடங்களை விற்பனை செய்வதில் ஏப்ரல் முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் வரவுள்ளன. கடந்த காலங்களில் அரசு வழங்கிய சலுகை காலங்கள் முடிவடைய உள்ள நிலையில், இனி DTCP (சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்)அல்லது CMDA (நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம்) அங்கீகாரம் இல்லாத இடங்களை பதிவு செய்வதில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும்.

சொத்து வாங்குபவர்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று ஆசைப்படாமல், அந்த இடத்திற்கு முறையான அங்கீகாரம் இருக்கிறதா என்பதை மார்ச் 31-ம்தேதிக்கு முன்பே நன்கு ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வதன் மூலம் உங்கள் வாழ்நாள் சேமிப்பை பாதுகாக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மக்களே கவனம்..! 2 நாட்களுக்கு பத்திரப்பதிவு இணையதளங்கள் செயல்படாது..!
பத்திரப்பதிவு

ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளவர்கள் மற்றும் புதிதாக இடம் வாங்கி வீடு கட்டத் திட்டமிடுபவர்கள், இந்த மார்ச் மாத இறுதிக்கு பத்திரப்பதிவை முடிப்பதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com