

தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். இதுவரை இல்லாத வகையில் பதவியேற்பு நாளில் விஜய் கோட் சூட் அணிந்து கொண்டு வந்தது மக்கள் மத்தியில் புதுமையாக பார்க்கப்பட்டது. மேலும் சட்டசபைக்கும் முதல்வர் கோட் சூட் அணிந்து கொண்டே வருகை புரிந்தார்.
பொதுவாக தமிழக முதல்வர்கள் பாரம்பரிய வேட்டி சட்டை அணிவதே வழக்கமாக இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கத்தில் புதுமையை சேர்க்கும் விதமாக கோட் சூட் அணிந்து கொண்டு முதல்வராக விஜய் பணியாற்றுவது, பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் விஜய் அணிந்துள்ள கோட் சூட் குறித்த அரிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
தமிழக முதல்வர்கள் பெரும்பாலும் சட்டசபைக்கு வேட்டி சட்டை அணிந்து கொண்டு வருவது தான் வழக்கம். முதல்வர்கள் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் போதோ அல்லது ஏதேனும் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் போதோ மட்டும் தான் கோட் சூட் அணிந்துள்ளனர்.
ஆனால் தற்போது பொறுப்பேற்று இருக்கும் முதல்வர் விஜய், பதவியேற்பு தினத்தில் இருந்து சட்டசபை வரை கோட் சூட்டிலேயே வருகிறார். அதுவும் அவர் அணிந்துள்ள கருப்பு நிற கோட் சூட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
முதல்வர் விஜய் அணிந்துள்ள கேட் சூட்டை பிரபல ஆடை வடிவமைப்பாளரான ‘ஜஃபிர் அகமது’ வடிவமைத்தார். இவர் ஜஃபீர் அண்ட் ஷதாப் (Zafir and Shadab) என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஒரு சில திரைப்படங்களில் கோட் சூட் அணிந்து கொண்டு நடித்திருந்தாலும், பீஸ்ட் படத்தில் அவர் அணிந்திருந்த கோட் சூட் அதிக வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக பீஸ்ட் படத் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தான் முதல்வர் விஜய்க்கான கோட் சூட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோட் சூட் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பது முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட விருப்பமாகும். கருப்பு நிறம் அதிகாரம், ஆளுமை மற்றும் தனித்துவத்தை உணர்த்தும் என்பதால் இந்நிறத்தை முதல்வர் விஜய் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கோட் சூட்டை வடிவமைத்த பிறகு, அதனை விஜய்யின் உடல் அமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக பொருந்தும் வகையில் சீர் செய்வதற்கு மட்டும் 2 நாட்கள் ஆகியுள்ளன.
இந்த கோட் சூட்டானது 'டிரெடிஷனல் கேன்வாஸ் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற நுணுக்கமான தையல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேட்-பினிஷ் கொண்ட கோட் சூட்டுடன், எப்போதும் சுருக்கங்கள் விழாத கிரிஸ்ப் ஒயிட் ஷர்ட் மற்றும் அதற்குப் பொருத்தமான கருப்பு நிற டை-யும் உள்ளது.
சாமானியர்கள் அணிந்து கொள்ளும் கோட் சூட் போல் அல்லாமல், முதல்வர் விஜய்க்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதன் விலை குறித்த விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இருப்பினும் முதல்வர் விஜய் அணிந்திருக்கும் கோட் சூட் போலவே தற்போது பல கடைகளில் கோட் சூட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் விலை சுமார் ரூ.3,999 வரை விற்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன