போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! முதல்வர் விஜய் போட்ட ரகசிய உத்தரவு?

Traffic control in Chennai
CM Vijay
Updated on

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றதற்கு பிறகு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக மது மற்றும் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதை தவிர்க்க, முதல்வர் விஜய் எடுத்துள்ள நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ்ப் புதல்வன் மற்றும் மகளிர் உரிமை தொகை திட்டங்களின் உதவித்தொகை கால தாமதமின்றி வரவு வைக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் வீட்டிலிருந்து தலைமைச் செயலகம் வருவதற்கு சுமார் 17 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்ய வேண்டிய சூழலில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுத்த முதல்வர் சிறப்பு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ஒரு அரசு அதிகாரி எப்படி பணிபுரிய வேண்டுமோ, அதே போல் சரியான நேரத்திற்கு முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்து விடுகிறார். வீட்டிலிருந்தே மதிய உணவை எடுத்து வந்து, முதல்வர் விஜய் சாப்பிடுவதும் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் விஜய் தற்போது வசிக்கும் நீலாங்கரை இல்லத்திலிருந்து புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகம் செல்வதற்கு கிட்டத்தட்ட 17 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதன் காரணமாக முதல்வர் விஜய் வரும் போதெல்லாம் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனைத் தடுக்க முதல்வர் விஜய் தனது வீட்டை தலைமைச் செயலகத்திற்கு அருகிலேயே மாற்றுவாரா என்று கேள்வியும் சில தினங்களுக்கு முன்பு எழுந்தது. இந்நிலையில் அது குறித்த ஆலோசனையில் முதல்வர் விஜய் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : விஜய் போட்டியே இல்லாத பிரதமர் ஆவார் - ஜோதிடர் ராதன் பண்டிட் அதிரடி கணிப்பு..!
Traffic control in Chennai

நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு அருகிலேயே வீட்டை மாற்றுவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வரும் விஜய், அதுவரை தற்போது பயணம் செய்யும் போதெல்லாம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தற்போது முதல்வர் விஜய்யின் காரைப் பின்தொடர்ந்து வரும் வாகன அணிவகுப்பு பாதை முழுவதும் போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கும், பொதுமக்கள் சிரமமின்றி பயணிப்பதற்கும் சிறப்பு போக்குவரத்து மாற்றங்களை செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.

முதல்வரின் உத்தரவுப்படி செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றங்களால் தற்போது போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
நேரம் குறையுது.. கட்டுப்பாடு ஏறுது.! இனி ஆதார் கார்டு இருந்தா தான் 'சரக்கு'.!
Traffic control in Chennai

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com