கடலுக்கு அடியில் சென்று அனைத்து விதமான உயிரினங்களையும் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகளை அனுப்பும் திட்டம் இந்த ஆண்டு நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்காக மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் மட்டும் விண்வெளி, ஆழ்க்கடல், வேறு கிரகம் போன்ற இடங்களுக்கு செல்வார்கள். ஆனால், இப்போது மக்கள் விண்வெளி, ஆழ்க்கடல் என பிரபஞ்சத்தையே சுற்றிப்பார்க்க விரும்புவதால் அனைத்திற்கும் சுற்றுலா வசதிகள் வந்துள்ளன.
முதலில் உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற பேராசையில் இருந்த மக்கள், இப்போது பிரபஞ்சத்தையே சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற மிகுந்த பேராசையில் இருக்கின்றனர். இனி வரும் காலங்களில் இந்த பேராசை அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்வார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அரசும், எலான் மஸ்க் போன்ற ஆட்களும் மக்களின் இதுபோன்ற விருப்பத்தை நிறைவேற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் என்றே கூறலாம்.
அந்தவகையில் ஆழ்க்கடலில் சகஜமாக மக்கள் சுற்றுலா செல்லலாம் என்றும், இந்த ஆண்டு முதல் அது சாத்தியமாகிவிடும் என்றும் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக, இத்திட்டத்திற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள மத்ஸயா 6000 என்ற நீர்மூழ்கி கப்பல் ஆழ்கடலுக்குள் 500 மீட்டர் ஆழத்திற்கு அனுப்பப்படுமென அவர் கூறினார்.
இதன் செயல்பாடுகளை கண்காணித்து, அதாவது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை செயல்படுத்திப் பார்த்துவிட்டு, அடுத்த ஆண்டுக்குள் ஆழ்கடலில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
இதன்மூலம் மக்கள் ஆழ்க்கடலில் இருக்கும் அறிய வகை உயிரினங்கள் அனைத்தையும் கண்கள் குளிரப் பார்க்கலாம்.
மேலும் அங்கிருக்கும் வளங்கள், உயிரினங்கள் ஆகியவற்றை ஆராய்வதன் மூலம் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த முடியுமென அவர் கூறினார்.
இந்தத் திட்டம் மட்டும் சாதனை அடைந்துவிட்டால், கையில் பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று அறியாதவர்கள் இதுபோன்ற சுற்றுலா சென்று வாழ்க்கையை அனுபவிப்பார்கள். மிடில் கிளாஸ் மக்கள் வழக்கம்போல், டிவியிலோ, சமூக வலைதளங்களிலோ உலகை எண்ணி ஆச்சர்யப்பட்டு கற்பனையில் மிதக்கலாம்.