பண்டிகை காலங்களில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் - கொந்தளிக்கும் மக்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் செல்வதற்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறது.
Omni bus
Omni busDT Next
Published on

பண்டிகைக் காலங்கள் என்றாலே ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம்தான். அதுவரை சாதாரண கட்டணங்களில் இயங்கி வரும் ஆம்னி பஸ்கள், பண்டிகை காலம் நெருங்கியதும் கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு உயர்த்துவது காலம்காலமாக நடந்து வருகிறது.

வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தொடர் விடுமுறை வருவதால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். வெளியூரில் உள்ள நிறைய பேர் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்னையில் தங்கி உள்ளனர். குறிப்பாக சென்னையில் வசித்து வரும் வெளியூர் மக்கள் பஸ், ரெயல்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். ரெயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பஸ்கள்தான்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான பயணிகள் முதல் விருப்பம் ஆம்னி பஸ்கள் தான். காரணம், கிளாம்பாக்கம் சென்று அரசு பஸ்களை பிடிப்பதை விட கோயம்பேட்டில் இருந்தே தனியார் பஸ்களில் பயணிக்க முடியும் என்பதால் ஆம்னி பஸ்களை தேர்வு செய்கிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணம் மிகவும் உச்சம் தொட்டு உள்ளது. அதாவது, வழக்கமாக நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.800, ரூ.850-க்கு ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் பயணக் கட்டணம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பன் மடங்கு அதிகரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்:
‘ஆஸ்திரேலியன் ஆஸ்துமா வீட்’ ?? - அது ஒண்ணுமில்லீங்கோ... நம்ம 'அம்மான் பச்சரிசி' தானுங்கோ!
Omni bus

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், மேற்குறிப்பிட்ட தேதிகளில் தென்மாவட்ட நகரங்களான நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு செல்வதற்கு தனியார் ஆம்னி பஸ்களில் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

இதே போன்று, கோவைக்கு அதிகபட்சமாக ரூ.2,850 வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களின் அதிகபட்சமான கட்டண கொள்ளை ஆன்-லைனில் வெளிப்படையாக இருந்த போதிலும் இது குறித்து தமிழக அரசு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!
Omni bus

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை தென்மாவட்டங்களுக்கு பயணிப்பதற்கு இதுவரை ஆம்னி பஸ்களில் 1,40,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஆம்னி பஸ்கள் கட்டண சம்பந்தமான புகார்களுக்கு 90433 79664 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு எங்கள் சங்கத்திடம் புகார் தெரிவிக்கலாம்," என்றும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com