

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம்தேதி முதல் ஏப்ரல் 6-ம்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இடையில் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது என்பதை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதிப்படுத்தி உள்ளார்.
அதாவது வேட்புமனு தாக்கல் செய்ய மொத்தம் 8 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால், 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருப்பது விவாதத்திற்குரிய விஷயமாகியுள்ளது..
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9 என்றும் அவர் கூறினார்.
மனுதாக்கல் தொடக்கம்: மார்ச் 30-ம்தேதி
மனு தாக்கல் முடிவு: ஏப்ரல் 6-ம்தேதி
மொத்த நாட்கள்: 8 நாட்கள்
இந்த 8 நாட்களில் மொத்தம் 4 நாட்கள் அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை வருவதால், அந்த நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது.
அரசு விடுமுறை நாட்கள்
மகாவீர் ஜெயந்தி - மார்ச் 31
புனித வெள்ளி - ஏப்ரல் 3
ஏப்ரல் 4-ம்தேதி : சனி
ஏப்ரல் 5-ம்தேதி: ஞாயிறுகிழமை வார விடுமுறை
1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் (Negotiable Instruments Act), பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இயலாது.
இதன் விளைவாக வேட்பாளர்கள் மார்ச் 31, ஏப்ரல் 3,4,5 ஆகிய 4 நாட்களில் மட்டுமே தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். எனவே வேட்பாளர்கள் இந்த குறுகிய கால அவகாசத்தை கருத்தில் கொண்டு, தங்களது ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து, நெரிசலை தவிர்க்கத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 6-ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் மார்ச் இறுதியில் தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.