ஆபரேஷன் சாகர் பந்து: வெள்ளத்தில் மூழ்கும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!

Indi Helps to Sri Lanka
Sri Lanka Flood
Published on

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இலங்கை கடற்கரையில ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் உருவானது. இது டித்வா புயலாக உருவெடுக்கவே, கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை 90-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து 12 டன் நிவாரண பொருள்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது இந்தியா. இலங்கையில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக 20,500 ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இலங்கையில் உள்ள கெலானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால், கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இலங்கை தலைநகர் கொழும்புவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்றும் 200 மில்லி மீட்டர் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ராணுவ வீரர்களும், மீட்புப் பணியினரும் தயார் நிலையில் உள்ளனர். டித்வா புயல், மோசமான வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா நிவாரணப் பொருட்களை அளித்து உதவி வருகிறது. இதற்காக 12 டன் நிவாரணப் பொருட்கள் இன்று காலை கொழும்புவில் தரையிறங்கியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “அன்புக்குரியவர்களை இழந்து வாடும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள். அசாதாரண சூழலில் இருந்து விரைவில் இலங்கை மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். தற்போது இலங்கைக்கு மீட்பு உதவிகளையும், நிவாரண பொருட்களையும் இந்தியா வழங்கியுள்ளது. மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டாலும் இந்தியா வழங்க தயாராக இருக்கிறது. இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ இந்தியா என்றும் தயார் நிலையில் இருக்கும்” என பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை அரசு இந்தியாவிடம் முறைப்படி உதவி கேட்டதும், ஐஎன்எஸ் விக்ராந்தில் இருக்கும் ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் களமிறங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தேவையான நேரத்தில் இந்தியா உதவியிருப்பதால், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கா இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
பூமியைத் தாக்கிய சூரிய புயல்: இஸ்ரோ சொல்வது என்ன?
Indi Helps to Sri Lanka

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “ஆப்ரேஷன் சாகர் பந்து மீட்டு நடவடிக்கையின் மூலம் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவி வருகிறது. இந்நிலையில் மருந்து பொருட்கள், போர்வைகள், தார்பாய்கள் மற்றும் சாப்பிட தயார் நிலையில் இருக்கும் உணவுகள் உள்பட 12 டன் நிவாரண பொருட்கள் தற்போது இலங்கையின் கொழும்புவில் தரையிங்கியுள்ளது. இந்தியாவின் C-130 J என்ற விமானத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

டித்வா புயலால் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே கன மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டின் இன்று பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
60 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடியில் நடந்த அதிசயம்..!
Indi Helps to Sri Lanka

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com