தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!! தவெகவில் இணையப் போகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக பரவும் தகவல் குறித்து முழு விவரங்களை அறியுங்கள்.
O.pannir selvam and stalin
OPS in DMKThe federal
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம், திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்காக அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதன் பின்னர் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின்னர் அமைச்சர் பதவி அளிக்க உத்தரவாதம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் டிடிவி. தினகரனால் அடையாளம் காணப்பட்டு , ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியபோது , முதல்வர் பதவிக்கு வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். பின்னர் எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு பெரிய முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரை கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. அதனால் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தனது மகன் ஓபி.ரவீந்திரநாத் உடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் தனது தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், அவர் இணைந்து கொண்ட திமுக சட்டமன்றத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்தது. திமுகவின் தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் பலரும் தேர்தலில் தங்கள் தொகுதியில் தோல்வியுற்றனர். தேர்தலில் திமுக தோல்வியடைந்தாலும் எதிர்கட்சித் தலைவர் பதவி உதயநிதிக்கு அளிக்கப்பட்டது. திமுக சார்பில் முன் வரிசையில் சட்டமன்றத்தில் அமர பன்னீர் செல்வத்துக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. அவர் இரண்டாவது வரிசையில் அமர வைக்கப்பட்டார். தற்போது தமிழகத்தில் வாழும் அரசியல்வாதிகளில் அதிக முறை முதல்வரான பெருமைக் கொண்டவர் பன்னீர் செல்வம். ஆனாலும் அவருக்கு உரிய மரியாதை திமுகவில் கிடைக்க வில்லை.

தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை பதவியேற்றுக் கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். அது மட்டுமல்லாமல் துணை முதல்வராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர். இப்படி ஒரு முக்கிய தமிழக அரசியல் கட்சியின் உச்ச பதவியில் இருந்த அவருக்கு , தற்போது திமுகவில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று வேதனைப்படுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதே நேரம் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து மாபெரும் வெற்றி பெற்று அமைச்சரவையிலும் பங்கேற்று உள்ளார். அந்த கட்சியின் அரசியல் சார்ந்த அனைத்து முடிவுகளையும் அவரது ஆலோசனையை பின்பற்றி எடுக்கப்படுகிறது. செங்கோட்டையனுக்கு அவரது அனுபவத்திற்கு ஏற்ற மாதிரி மரியாதை கிடைக்கிறது.

ஆனால் , திமுகவில் பன்னீர்செல்வத்திற்கு இதுவரை எந்த ஒரு முக்கிய கட்சி பொறுப்பும் வழங்கப்படவில்லை . இதனால் தான் திமுகவில் ஓரம் கட்டப்பட்டதாக அவர் உணர்கிறார். பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், இனி திமுகவில் இருப்பது தங்களது அரசியல் எதிர்காலத்தை அழிப்பதற்கு சமம் , என்று தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அவர் திமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைவதற்கு பேச்சுவார்த்தைகளும் முன்னெடுத்துள்ளனர்.

இதற்காக அந்த கட்சியின் முன்னணி தலைவர்களான ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் மூலம் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருபுறமும் சம்மதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

O.pannieselvam
OPS Jump TVKthe statesman

இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் " நான் இப்போது தான் ஒரு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு , வேறு கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகி உள்ளேன். நான் தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை , என்னை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
திமுக - தவெக இணைய வேண்டும்: திருமாவளவன் போடும் புதிய கணக்கு..!
O.pannir selvam and stalin
logo
Kalki Online
kalkionline.com