திரு.சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துகள் - சத்குரு வாழ்த்து..!

Sadhguru Bowing
Sadhguru
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாட்டில் 13-வது முதலமைச்சராக விஜய்க்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

விஜய் முதல்வரானதும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வைத்திருக்கும் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்ற பொறுப்பேற்கும் புதிய அரசாங்கத்திற்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சனி ஓரையில் முதலமைச்சராக பதவியேற்கும் விஜய் - தவெக-வின் அரசியல் பயணம் இனி எப்படி இருக்கும்..?
Sadhguru Bowing
logo
Kalki Online
kalkionline.com