வரலாற்று சிறப்புமிக்க கௌரவம்.!ரகசியம் காத்த 2 இந்திய மருத்துவர்களுக்கு பாகிஸ்தானின் உயரிய விருது.!

இந்திய மருத்துவர்களின் நேர்மைக்கு பாகிஸ்தான் அரசு அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க கௌரவம்.!
இந்திய மருத்துவர்கள்
India - Pakistan
Updated on

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தற்போது வரை எதிரிகளாக இருக்கின்றன. இதன் காரணமாக இருநாட்டு எல்லைகளிலும் எப்போதும் தீவிர பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விளையாட்டு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட வேண்டிய சூழல் வரும்போது ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே உலகளவில் அதிக கவனம் ஈர்க்கக் கூடிய போட்டியாக இருக்கும். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் எதிரெதிர் திசையிலேயே பயணித்து வருகின்றன. இப்படியான சூழலில் மும்பையைச் சேர்ந்த 2 இந்திய மருத்துவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை எதிரியாக நினைக்கும் பாகிஸ்தான், இந்திய மருத்துவர்களுக்கு விருதை வழங்க மிக முக்கிய காரணம் உண்டு. பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக இந்த 2 மருத்துவர்களின் கண்ணியமும், நேர்மையும் மிக முக்கியப் பங்காற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
சச்சின் டெண்டுல்கரை 'சார்' என அழைக்கும் பாகிஸ்தான் வீரர் யார் தெரியுமா?
இந்திய மருத்துவர்கள்

இன்று பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருக்கிறது என்றால், அதற்கு முகமது அலி ஜின்னா தான் முக்கிய காரணம். லண்டனில் சட்டம் பயின்ற இவர், மும்பையில் வழக்குரைஞராக பணியாற்றினார். தொடக்க காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜின்னா, இந்து - முஸ்லீம் உறவை மேம்படுத்தும் தூதராக செயல்பட்டார்.

பிற்காலத்தில் காங்கிரஸில் இருந்து விலகி, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியில் இணைந்தார். முஸ்லீம்களுக்கு அரசியல் மற்றும் சமூக உரிமைகளைப் பெற்றுத் தர தனி நாடு வேண்டும் என்ற கொள்கையில் ஜின்னா தீவிரமாக இருந்தார். இவரது முயற்சியால் 1947 ஆகஸ்ட் 14 அன்று, இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலும் இவர் தான்.

இந்தியாவின் தேசத்தந்தை என மகாத்மா காந்தியை நாம் போற்றுவது போல, பாகிஸ்தானின் தேசத்தந்தை என முகமது அலி ஜின்னா போற்றப்படுகிறார். இந்திய பிரிவினைக்கு முன்னதாக தீவிர காச நோயால் பாதிக்கப்பட்டார் முகமது அலி ஜின்னா.

இதனை மும்பையைச் சேர்ந்த இந்திய மருத்துவர்களான ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் டாக்டர் ஜல் தேபோ-கூ ஆகியோர் கண்டுபிடித்தனர். மேலும் அவர் 2 ஆண்டுகள் வரை மட்டுமே உயிரோடு இருப்பார் எனவும் அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த உண்மையை இந்திய மருத்துவர்கள் இருவரும் அப்போதே வெளியே சொல்லி இருந்தால், அன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கு பாகிஸ்தான் என்ற நாடு உருவாகி இருக்குமா என்பதே சந்தேகம் தான். ஆனால் மருத்துவ நெறிமுறையின் படி இந்த உண்மையை இந்திய மருத்துவர்கள் வெளியில் சொல்லாமல் ரகசியமாக காத்தனர்.

இதையும் படியுங்கள்:
கர்மா சும்மா விடாது.!! 900 பேரை நீக்கிய இந்திய வம்சாவளி CEO-வுக்கு நேர்ந்த கதி.!
இந்திய மருத்துவர்கள்
Muhammed Ali Jinnah
India -Pakistan

மருத்துவர்களின் நேர்மையையும், கண்ணியத்தையும் போற்றும் விதமாக பாகிஸ்தானின் உயரிய விருதான ‘நிஷான்-இ-இம்தியாஸ்’, மறைந்த இந்திய மருத்துவர்களுக்கு வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு தற்போது அறிவித்துள்ளது. 2027 மார்ச் மாதம் பாகிஸ்தான் தின விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.

பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவான அடுத்த ஆண்டு 1948 செப்டம்பர் 11-ல் முகமது அலி ஜின்னா தீவிர காச நோயால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com