ஏப்ரல் 1 முதல் புதிய கிரெடிட் கார்டு விதிகள்: 10 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால் ஐடி நோட்டீஸ்?

Credit card
Credit card
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஏப்ரல் 1,2026 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. இதில் விண்ணப்பிக்கும் போது பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தால் வருமான வரித்துறைக்கு அறிக்கை அளிப்பதும், எஸ்பிஐ கார்டுகளில் கேஷ்பேக் கட்டுப்பாடுகள் ஆகியவையும் அடங்கும்.

கிரெடிட் கார்டு விண்ணப்பங்களுக்கு பான் கார்டு(PAN) எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் கார்டு இல்லாமல் வங்கிகள் விண்ணப்பங்களை ஏற்காது. இது வரி ஏய்ப்பை தடுக்க உதவும்.

நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல்(ரொக்கமில்லா பரிவர்த்தனை) செலவு செய்தால், வங்கிகள் அந்த விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

ரூபாய் 1 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பில் செலுத்தினால், அது கண்காணிக்கப்படும். அதாவது அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் அனைத்துமே பதிவு செய்யப்படும்.

எஸ்பிஐ கேஷ் பேக் கார்டு கட்டுப்பாடுகள்: ஏப்ரல் 1 முதல் கேஷ்பேக் கார்டில்(SBI Cashback) ஒரு ஸ்டேட்மெண்ட் சுழற்சிக்கு அதிகபட்ச கேஷ்பேக் ரூபாய் 4000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் 5% - அதிகபட்சம் ரூ.2000, ஆஃப்லைன் 1% - அதிகபட்சம் ரூ.2000).

கிரெடிட் கார்டு அறிக்கையை 3 மாதங்களுக்குள் இருந்தால் முகவரிச் சான்றாக பயன்படுத்தலாம். இது கூடுதல் ஆவணங்களுக்கான தேவையை குறைப்பதுடன் பான் விண்ணப்ப செயல் முறையையும் எளிதாக்கும்.

கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்தலாம். இதுவரை நெட் பேங்கிங், டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகள் தவிர வேறு வழிகள் மூலம் மட்டுமே சாத்தியமானது இப்பொழுது கிரெடிட் கார்டுகள் மூலமும் வருமான வரி செலுத்தலாம் என்றுள்ளது. இது பண பரிவர்த்தனையில் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. இது வசதியாக இருந்தாலும், செயலாக்க கட்டணம் மற்றும் வட்டி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.

நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிறுவனத்தின் கிரெடிட் கார்டுகள் மீதான வரி விதிகள், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இருந்தால் மாற்றப்படலாம். அதாவது கிரெடிட் கார்டு தனிப்பட்ட செலவுக்கு பயன்படுத்தப்பட்டால், அந்தத் தொகை ஊழியரின் வருமானமாக கருதப்படலாம். அதற்கு வரியும் விதிக்கப்படலாம். எனவே அலுவலக செலவுகள் மற்றும் தனிப்பட்ட செலவுகள் தெளிவாக பிரிக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருவதால் பயனர்கள் தங்கள் செலவு மற்றும் கணக்கு விவரங்களை அதற்கு ஏற்றவாறு நிர்வகிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
ஜாக்பாட் அறிவிப்பு: 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 பரிசு!
Credit card
logo
Kalki Online
kalkionline.com