பெற்றோர்களே உஷார்.! காணாமல் போகும் குழந்தைகள்.! தலைநகரில் நடக்கும் அவலம்!

Children missing cases in Delhi
Children missing
Published on

நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்பது மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, நாட்டின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் டெல்லியில் 1.84 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

குழந்தைகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், குழந்தைகள் கடத்தப்படுவதை மட்டும் இன்றுவரை தடுக்க முடியவில்லை. கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், அந்நேரத்தில் மட்டும் குழந்தைகள் கடத்தப்படுவது குறைவாக இருந்தது. இருப்பினும், தொடர்ச்சியாக குழந்தைகள் கடத்தப்படுவதற்கும், சமூக வலைதளப் பயன்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில் டெல்லியில் மட்டும் 1.84 லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதில் 1.33 குழந்தைகள் மீட்கப்பட்டாலும், 50,771 குழந்தைகளைப் பற்றிய விபரங்கள் இன்றுவரை தெரியவில்லை. இந்தக் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்ற விவரங்களும் தெரியவில்லை.

குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் நிலையை நினைத்தால், அது இன்னும் கொடுமை. குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு காட்டும் அக்கறையை விட பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். 2019, 2023 மற்றும் 2024 ஆகிய 3 ஆண்டுகளில் குழந்தைகள் கடததல் மற்ற ஆண்டுகளை விட அதிகம் என கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு முழுமையாக அமலில் இருந்ததால், குழந்தைகள் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் குறைந்தன. இதனால் இந்த ஆண்டில் மட்டும் குழந்தைகள் கடத்தல் தற்காலிகமாக குறைந்தது. இருப்பினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் குழந்தைகள் கடத்தல் மெல்ல மெல்ல உயர்ந்தது.

குழந்தைகள் கடத்தலில் சிறுவர்களைக் காட்டிலும் சிறுமிகளின் எண்ணிக்கை தான் மிக அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் 98,000 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் இன்னமும் 27,000 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தரவுகள் கூறுகின்றன. வணிக சுரண்டல் மற்றும் பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு சிறுமிகள் தான் பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை... மாநிலத்தின் மகளான நீதிகா!
Children missing cases in Delhi

வயதின் அடிப்படையில் பார்த்தால் 12 முதல் 18 வரையிலான சிறுமிகள் தான் அதிகம் கடத்தப்படுகிறார்கள். சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களுடன் பழகுவதும் குழந்தைகள் கடத்தலுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட டீனேஜர்களும், 14,800க்கும் மேற்பட்ட சிறுவயது குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது தான் பெரும் சோகம்.

குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் தான் முதலில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் சிறுவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அடிக்கடி கண்காணிப்பதும், வெளியில் பாதுகாப்பாக சென்று வருவதற்கும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தல் அவசியமாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தையின் IQ லெவலை உயர்த்தும் 5 வழிகள் இதோ!
Children missing cases in Delhi

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com