

பெங்களூரில் பொதுச் சாலைகளில் காரை நிறுத்த ஆண்டுதோறும் ரூ.25,000 வரை கட்டணம் வசூலிக்கக் கிரேட்டர் பெங்களூரு வாரியத்தின் (GBA) புதிய வரைவு விதிகள் பரிந்துரைத்துள்ளன.
அதாவது இனிவரும் காலங்களில் பெங்களூருவில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள பொதுச் சாலைகளில் வாகனங்களை நிறுத்த விரும்பினால், GBA (வாகன நிறுத்தம்) விதிகள், 2026-இன் வரைவின்படி, வாகன வகையைப் பொறுத்து ஆண்டுதோறும் ரூ.25,000 வரை குடியிருப்பு வாகன நிறுத்தக் கட்டணம் (அபராதம் அல்ல, அனுமதி கட்டணம்) செலுத்த நேரிடலாம்.
இது அபராதமோ உடனடித் தண்டனையோ அல்ல; பொதுச் சாலைகளில் வாகனம் நிறுத்தப் பெறப்படும் அனுமதிக் கட்டணம் ஆகும். அதாவது, சாலைகளில் வாகனம் நிறுத்த அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கான முறையான கட்டணம் (Parking Fee) ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பார்க்கிங் zonas-களில் வண்டி நிறுத்தும்போது இந்த முறை அமலில் இருக்கும். வாகனத்தின் வகையைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடுகிறது.
செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல், தங்கள் வீடுகளுக்கு வெளியே பொதுச் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவது சட்டவிரோத வாகன நிறுத்தமாகக் கருதப்பட்டு, அபராதங்களுக்கு உள்ளாகலாம் (பார்க்கிங் விதிமுறைகள்) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் A,B,C என வகைப்படுததி அதன் அடிப்படையில் ஒவ்வொரு சாலைகளிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் குடியிருப்புளை ஒட்டிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு, எஸ்யூவி (SUV) கார்களுக்கு ஆண்டுக்கு 25,000 ரூபாயும், செடான் (Sedan) கார்களுக்கு ஆண்டுக்கு 20,000 ரூபாயும், ஹேட்ச்பேக் (Small Cars) கார்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்து இதுகுறித்து 30 நாட்களில் கருத்து தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது இது தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வரைவு விதியாகும். பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்ட பிறகே இறுதி செய்யப்படும் என்றும் தெளிவு படுத்தப்படுள்ளது.
வணிக மற்றும் போக்குவரத்து தீவிரத்தின் அடிப்படையில் சாலைகள் வகைப்படுத்தப்பட்டு, அதிகப்படியான நேரத்திற்கு மணிநேரக் கட்டணமும் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இதர பொதுச் சாலைகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 முதல் ரூ.80 வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரதான மற்றும் துணைப் பிரதான சாலைகள் அல்லாத பிற சாலைகளில் குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, கட்டிட விதிகளின்படி, அந்தந்த மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடியிருப்பு வாகன நிறுத்த அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கட்டிட துணை விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வாகன நிறுத்துமிடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பொருள், துணை விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல், தங்கள் வீடுகளுக்கு வெளியே பொதுச் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவது சட்டவிரோத வாகன நிறுத்தமாகக் கருதப்பட்டு, அபராதங்களுக்கு உள்ளாகலாம்.
பெங்களூருவில் சாலையோர வாகன நிறுத்தம் ஒரு பெரும் பிரச்சனையாக நீடித்து வரும் வேளையில் இந்த வரைவு விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் பொதுச் சாலை இடத்தை ஆக்கிரமிப்பதோடு, போக்குவரத்துக்கு தடையாகவும், பாதசாரிகள் நடப்பதற்கு இடஞ்சலாகவும் இருப்பதாக பல்வேறு புகார் வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இணைப்புச் சாலைகளில் (முக்கிய சாலைகள் அல்லாதவை), போக்குவரத்திற்காகக் குறைந்தபட்சம் ஆறு மீட்டர் சாலை இடமும், இருபுறமும் 1.8 மீட்டர் தெளிவான நடைபாதையும் பராமரிக்கப்பட்டால் மட்டுமே வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிகளால் பணியமர்த்தப்பட்ட மார்ஷல்கள் அல்லது பிற நியமிக்கப்பட்ட அதிகாரிகள், குடியிருப்பு வாகன நிறுத்த அனுமதிகளின் செல்லுபடியை சரிபார்த்து, மீறல்களைக் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம்.
பெங்களூரு போக்குவரத்து காவல்துறை, வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்ற விதியை அமல்படுத்துவதோடு, செல்லுபடியாகும் குடியிருப்பு வாகன நிறுத்த அனுமதிச் சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அதற்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு வாகன நிறுத்தப் பகுதிகளில் நிறுத்தப்படுவதையும் உறுதி செய்யும்.