பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க: திருப்பதி ரெயில் சேவையில் அதிரடி மாற்றம்..!

Tirupati , Train Service
Tirupati , Train Service
Published on

ஆந்திர மாநிலத்தில் திருமலை மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை குறைந்தபாடில்லை. ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அந்த வகையில் ஏழுமலையான் தரிசிக்க பெங்களூருவில் இருந்து அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருப்பதிக்கு சென்று வர அனைத்து பகுதிகளில் இருந்து ரெயில் சேவை உள்ளது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி லட்டு பற்றி வெளிவராத ரகசியங்கள்: 2025ல் படைக்கப்பட்ட பிரம்மாண்ட சாதனை!
Tirupati , Train Service

ஆனால் இனிமேல் திருப்பதிக்கு ரெயிலில் போக முடியாது. ஆமாங்க, திருப்பதி யார்டில் நடைபெறவிருக்கும் பாலப் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பெங்களூரு - திருப்பதி இன்டர்சிட்டி ரெயில் சேவையில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு - திருப்பதி எக்ஸ்பிரஸ் SMVT Train No :22618 ஏப்ரல் 27, 29 மற்றும் மே 2 ஆகிய நாள்களில் சந்தகிரி மற்றும் திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, மறுமார்க்கத்தில் வண்டி எண் 22617 திருப்பதி-பெங்களூரு அதிவிரைவு ரயில் ஏப்ரல் 28 மற்றும் மே 1 ஆகிய நாள்களில் திருப்பதி மற்றும் சந்தகிரி இடையே பகுதியாக ரத்து. இரு நாள்களும் இந்த ரயில் பிற்பகல் 3.05 மணிக்கு சந்தகிரியில் இருந்து புறப்படும்.

விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் Train No : 16854/16853, கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் Train No : 11615/22616, ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் Train No : 16780/16779 ஆகிய இந்த ரெயில்கள் அனைத்தும் சந்திரகிரி(Chandragiri) ரெயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கிருந்து தான் இயக்கப்படும். திருப்பதிக்கு போகாது.

சென்னை சென்ட்ரல் திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வரை தான் இயக்கப்படும். திருப்பதி - மன்னார்குடி பாமணி எக்ஸ்பிரஸ் திருப்பதி - கொல்லம் எக்ஸ்பிரஸ் திருப்பதியில் புறப்படும் நேரத்தையும் மாற்றப்பட்டுள்ளது.

திருப்பதி - மன்னார்குடி Pamani Express (17407) ஏப்ரல் 28 மற்றும் 30-ம்தேதி திருப்பதியில் இருந்து 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக புறப்படும்.

திருப்பதி - கொல்லம் எக்ஸ்பிரஸ்(17420) ஏப்ரல் 28 மற்றும் மே 1-ம்தேதி 30 நிமிடம் தாமதமாக புறப்படும்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்..! இனி வாட்ஸ்அப் மூலமே தரிசன டிக்கெட் பெறலாம்..!
Tirupati , Train Service

எனவே, மேற்கண்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு திருப்பதி செல்ல இருக்கும் பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு ரெயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com