பாஸ்போர்ட் எடுக்க இனி அலைய வேண்டாம்! உங்கள் ஊருக்கே வரும் 'நடமாடும் பாஸ்போர்ட் வாகனம்'...!

நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 நாட்கள் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட உள்ளது.
mobile passport van service
mobile passport van serviceimage credit-timesofindia.indiatimes.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எளிதாக பாஸ்போர்ட் (Passport) பெறும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ‘நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம்’ (Mobile Passport Seva Van) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மக்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் எடுத்து வருகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் பாஸ்போர்ட் பெறும் வசதி எளிதாக உள்ள நிலையில், கிராமபுற தொலைதூர மற்றும் போதிய அடிப்படை சேவைகள் கிடைக்காத பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நேரடியாக பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதற்காக வெளியுறவு அமைச்சகம் ‘நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம்’ என்ற முதன்மை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இச்சேவை சென்னையில் தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. தாம்பரம் அலுவலகத்திலிருந்து செயல்படத் தொடங்கிய இந்த வேன்கள், படிப்படியாக பாஸ்போர்ட் தேவைகள் அதிகம் உள்ள மற்றும் தொலைதூரத்தில் உள்ள இதர மாவட்டங்களுக்கும் இயக்கப்படுகிறது. பாஸ்பார்ட் சேவா கேந்திரா சார்பில் ஏற்கனவே, சேவா மையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவா மையங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில் பின்தங்கிய, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் நகர்ப்புற மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க முடியாதவர்களின் இருப்பிடத்திற்கோ அல்லது அருகில் உள்ள மாவட்ட மையத்திற்கோ சென்று சேவைகளை வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலிலேயே சேவையை வழங்கும் வகையில், வேன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ன.

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கு ஆவண சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் சேகரிப்பு வசதிகளை கொண்டு சேர்ப்பதன் மூலம் இந்த இடைவெளியை குறைப்பதை இந்த முன்முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது.

Passport|பாஸ்போர்ட் சேவை
Passport |பாஸ்போர்ட் சேவை

இதன்மூலம் ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு, பாஸ்போர்ட் விண்ணப்ப நடைமுறைகள் செயல்படுத்தப்படும். இதனால், அரசின் சேவைகள் பொதுமக்களின் வீட்டுக்கே கொண்டு வந்து நிறைவேற்றப்படுகின்றன.

கோவை, சேலம் மற்றும் அவற்றை ஒட்டிய கிராமப்புற பகுதிகள் மற்றும் ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நடமாடும் பாஸ்போர்ட் சேவை வேன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு ஐரோப்பியப் பயணம்!
mobile passport van service

இதன் ஒரு பகுதியாக இந்த சேவை நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருகிற 14-ந்தேதி முதல் 16-ம்தேதி வரை 3 நாட்கள் வழங்கப்பட உள்ளது.

எனவே அந்த மாவட்ட மக்கள் இந்த அரிய வாய்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்கள் இந்திய பாஸ்போர்ட் சேவையின் https://www.passportindia.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வழக்கமான திட்டத்தின் (Normal Scheme) கீழ் ஆன்லைனில் சந்திப்பு நேரத்தை முன்பதிவு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்திய பிறகு, அப்பாயிண்ட்மெண்ட் இருப்பிடமாக 'Mobile Van' என்பதைத் தேர்வு செய்து தேதி மற்றும் சந்திப்பு நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் விண்ணப்ப ரசீதில் குறிப்பிட்டுள்ளபடி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சரணப்பா தல்வார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
7 நாட்களில் பாஸ்போர்ட் பெற வேண்டுமா? - இந்த ஆவணம் இருந்தா போதும்..!
mobile passport van service

நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களுடைய புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தல் தேவைகளைத் தங்கள் மாவட்டத்திலேயே எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com