மகிழ்ச்சி செய்தி..! உயரப் போகும் PF பென்சன் தொகை..! எவ்வளவு தெரியமா..?

PF Pension
PF Account
Published on

நாட்டில் மாதச் சம்பளத்திற்கு பணி புரியும் அனைவருக்குமே மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவில் PF தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகையில் இருந்து தான் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின் PF பென்ஷன் வழங்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு PF பென்ஷன் தொகை ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக பிஎஃப் பென்ஷன் தொகை உயர்த்தப்படாமலேயே இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிஎஃப் பென்ஷன் தொகையை உயர்த்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) முடிவெடுத்துள்ளது.

பிஎஃப் தொடர்பான அனைத்து முடிவுகளையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் உயர்மட்ட குழவான மத்திய அறங்காவலர் குழு (CBT) தான் எடுத்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் மத்திய அறங்காவலர் குழுவின் உறுப்பினர்கள் சந்திக்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் பண வீக்கத்தின் அடிப்படையில் பிஎஃப் பென்ஷன் தொகையை உயர்த்துவதற்கான முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இதன்படி ரூ.1,000 ஆக உள்ள PF பென்ஷன் ரூ.2,500 ஆக உயர வாய்ப்புள்ளது.

தற்போதைய பொருளாதர நிலையை கருத்தில் கொண்டும், பண வீக்கத்தின் அடிப்படையிலும் பிஃப் பென்ஷன் தொகையை ரூ.7,500 ஆக உயர்த்தி தர வேண்டும் என பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. பென்ஷன் தொகையை 7.5 மடங்கு அளவிற்கு உயர்த்த முடியாது என வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போதுள்ள பென்ஷன் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பணியாளர் பிஎஃப் பென்ஷன் தொகையை பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். பிஎஃப் தொகையை எடுப்பதிலும், பென்ஷன் தொகையை வழங்குவதிலும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முற்றிலும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகிறது. விரைவில் ஏடிஎம்-மில் இருந்தே பிஎஃப் பணத்தை எடுக்கும் படியான புதிய வசதியை செய்து தர இந்நிறுவனம் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பிஎஃப் பென்ஷன் தொகையை உயர்த்தவிருப்பது பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நடைபெற உள்ள மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தின் முடிவில், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
PF பென்சன் - தொடர்ந்து 10 ஆண்டுகள் வேலை செய்தால்தான் கிடைக்குமா?
PF Pension

குறைந்தபட்ச பென்ஷன் தொகையை அதிகரிப்பது தொடர்பான முடிவைத் தவிர, முதலீட்டுக் கொள்கை, டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மற்றும் பென்ஷன் திட்டத்தின் நிதி அமைப்பு குறித்தும் மத்திய அறங்காவலர் குழு விவாதிக்க உள்ளது.

பென்ஷன் தொகையை உயர்த்துவதற்கான இறுதி முடிவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்றாலும், இந்தக் கூட்டத்தின் முடிவை இலட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்தது காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
PF பென்சன் பெற வேண்டுமா? இந்தத் தப்ப மட்டும் பண்ணாதீங்க!
PF Pension

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com