

ஸ்மார்ட்போன் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது என்ற நிலையை மாற்றகூடிய வகையில் இண்டர்நெட் வசதி இல்லாத சாதாரண கீபேட் (Feature Phones) மொபைல் பயனர்களும் பணம் அனுப்பவும், கடைகளில் பணம் செலுத்தவும் உதவும் ‘PhonePe UPI 123Pay’ என்ற புதிய சேவையை முன்னணி நிதித் தொழில்நுட்ப நிறுவனமான PhonePe அறிமுகப்படுத்தியுள்ளது.
நவீன கால உலகில், டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது கட்டாயமாகி உள்ளது. நாளுக்கு நாள் இதன் பயன்பாடும், தாக்கமும் அதிகரித்து வரும் சூழலில், இதில் முன்னணியில் இருக்கும் போன்பே செயலி, விரைவில் போன்பே 123பே (PhonePe UPI 123Pay) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பான அறிவிப்பையும் போன்பே வெளியிட்டு உள்ளது.
இந்தச் சேவையின் முக்கிய சிறப்பு, இண்டர்நெட் தேவையில்லை என்பதுதான். இந்த சேவை முற்றிலும் SMS மற்றும் மொபைல் நெட்வொர்க் (2G) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த வசதி மூலம் ஸ்மார்ட்போன் இல்லாமலேயே மொபைல் எண் அல்லது UPI ID மூலம் எளிதாகப் பணம் அனுப்பலாம்.
கேமரா வசதி உள்ள சாதாரண மொபைல்களில் க்யூ ஆர் கோடு (QR Code) ஸ்கேன் செய்தும் பணம் செலுத்த முடியும். வங்கிக் கணக்கில் உள்ள மீதித் தொகை (Balance Check) மற்றும் ஏற்கெனவே செய்த பணப்பரிவர்த்தனைகளையும் இதைப் பயன்படுத்தி அறியலாம்.
குறைந்த அளவில் 2G இணைப்பு வசதி கொண்ட இடங்களிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுவதை உறுதி செய்ய, நோக்கியா (Nokia), எச்டிஎம்டி (HMD), லாவா (Lava), ஐடெல் (Itel) போன்ற முன்னணி ஃபீச்சர் மொபைல் நிறுவனங்களின் புதிய மாடல்களில் முன்பே இன்ஸ்டால் (Pre-bundled) செய்யப்பட்டு வெளிவரும்.
எஸ்எம்எஸ் (SMS) அடிப்படையிலான தொழில்நுட்பம் மூலம் குறைந்த இணைப்பு உள்ள இடங்களிலும் இது செயல்படும்.
இதன் மூலம் பணம் அனுப்புவது, பெறுவது, வங்கி இருப்புத் தொகையை (Balance) சரி பார்ப்பது மற்றும் பரிவர்த்தனை வரலாற்றை, பட்டன் போன்களிலேயே பார்க்க முடியும். கேமரா வசதியுள்ள போன்களில் கியூஆர் (QR) கோடை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.
முதன்முறையாக நுகர்வோர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்வது எளிது. புதிய பயனர்களுக்கு உதவ AI அடிப்படையிலான குரல் உதவி சேவையையும் PhonePe அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் இந்த உதவி கிடைக்கும். சேவையைச் செயல்படுத்துவது முதல் UPI தொடர்பான அடிப்படை சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பது வரை இந்தக் குரல் உதவி வழிகாட்டும். விரைவில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களும் இந்த வசதியை பெறலாம்.
கேமரா பொருத்தப்பட்டுள்ள போன்கள், க்யூ ஆர் கோடு குறியீடுகளை ஸ்கேன் செய்யவும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும் முடியும்.
இந்தியாவில் உள்ள சுமார் 20 கோடிக்கும் அதிகமான சாதாரண மொபைல் பயனர்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர இந்தச் சேவை பெரிதும் உதவும் என PhonePe நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தச் சேவையின் மூலம், ஃபீச்சர் போன் பயனர்களுக்கு யுபிஐ கட்டணச் செலுத்தும் வசதியை வழங்கும் முதல் பெரிய மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர் (TPAP) என்ற பெருமையை ஃபோன்பே பெறுகிறது.
‘அடுத்த 30 கோடி பயனர்களை’ டிஜிட்டல் தளத்திற்குள் கொண்டு வருவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்று PhonePe-யின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சமீர் நிகம் கூறினார்.
அடுத்தடுத்த அப்டேட்களில் பில் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஆதார் மூலம் UPI-யில் பதிவு செய்தல் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாத நிலவரப்படி, PhonePe 71.5 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களையும், ஐந்து கோடிக்கும் அதிகமான கூட்டாளர்களைக் கொண்ட வணிகர் வலையமைப்பையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்ற பிற செயலிகளுக்கு மத்தியிலும் PhonePe தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தாத பயனர்களிடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதை இந்தப் புதிய சேவை நோக்கமாகக் கொண்டுள்ளது.