உயிரை காப்பாற்றிய ஹனுமன் சலீசா! பிரதமர் மோடியிடம் நெகிழ்ச்சியுடன் கூறிய விமானி ஸ்மித் மச்சார்!

விமானக் கடத்தலின் போது ஹனுமன் சலீசா கொடுத்த பலம். உயிர் பிழைத்த விமானியின் உரையாடலை தொடர்ந்து ஹனுமான் சலீசாவை இணையத்தில் தேடும் மக்கள்!
Smith Modi
Smith HanumanET and AI
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி, ஃப்ளை துபாய் விமானக் கடத்தலை தடுத்து, 170 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாரை காணொளி காட்சியின் மூலம் தொடர்பு கொண்டு மனதார பாராட்டினார்.

பிரதமர் மோடி பேசுகையில், "நாடு முழுக்க நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. உங்களது உடல் நலம் நலமுடன் இருக்க மகா மிருத்யுஞ்சய மந்திரமும் ஜெபிக்கப்பட்டு வருகிறது. உங்களது துணிச்சல், சமயோசித புத்தி, நிதானம் ஆகியவை பல உயிர்களை விபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளது. இந்தியர்கள் உயிர்களை எடுப்பவர்கள் அல்ல, மற்றவர்களின் உயிரை காப்பாற்ற தங்களது உயிரையும் கொடுக்க தயாராக இருப்பவர்கள்,என்று தாங்கள் நிரூபித்துள்ளீர்கள். இதை நாடு பெருமையுடன் கூறும்," என்று மோடி கூறியிருந்தார்.

மோடி பேசும்போது ஸ்மித் மச்சார், கண் கலங்கியபடி உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்தார். பிரதமரின் மனப்பூர்வமான பாராட்டினால் நெகிழ்ந்து போன விமானி ஸ்மித், பிரதமரிடம் தன் மனம் திறந்து பேசினார். அவர் பிரதமர் மோடியிடம், "நீங்கள் தான் எனக்கு மிகப்பெரிய முன்மாதிரி. உங்களிடம் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் கற்பனை கூட செய்தது இல்லை. இந்திய பிரதமரின் அழைப்பு என்னை மிகவும் பெருமை அடைய செய்துள்ளது," என்று கூறியிருந்தார்.

மேலும் தொடர்ந்த ஸ்மித், "எனக்கு ஏற்பட்ட காயங்களால் சரிந்து விழுந்தேன், நான் எதுவும் செய்யாவிட்டால்? மொத்த பயணிகளும் இறந்து விடுவார்கள் என்று உணர்ந்தேன். நான் 17 வருடங்களாக விமானம் ஒட்டி வருகிறேன். 11 வருடங்களாக கேப்டனாக இருக்கிறேன். என் கண்களை மூடிக் கொண்டாலும் விமானத்தில் நடைபெறுவதை என்னால் உணர முடியும். நான் சரிந்த போது விமானமும் செங்குத்தாக கீழே விழப் போவதை உணர முடிந்தது. எப்படியோ நான் கதவை திறக்க, வெளியே இருந்து பயணிகள் வந்து காப்பாற்றினர்.

Modi And smith video call
Modi and Smith

விமானத்தில் நடைபெற்ற அந்த தாக்குதல் சம்பவத்தின் போது தனக்கு வலி ஏற்பட்ட போதெல்லாம், நான் ஹனுமன் சல்லிசாவை பாடிக் கொண்டிருந்தேன். அந்த பிரார்த்தனை என் மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது. என்னை கடவுள்(ஹனுமன்) தான் காப்பாற்றினார், என்பது எனக்கு நன்றாக தெரியும்.

நான் எனது இரண்டு வயது மகனுக்காக தினமும் காலையில் ஹனுமன் சலிசாவை பாராயணம் செய்கிறேன். நான் இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் (துபாய்) , வசித்து வந்தாலும் நமது பாரம்பரியத்தில் இருந்து நான் விலகி செல்லவில்லை," என்று பிரதமரிடம் விவரித்தார்.

அதற்கு பதில் அளித்த பிரதமர், "ஒவ்வொரு இந்தியரும் உலக மக்களும் உங்களுக்கு காணவும் உங்களிடம் பேசவும் ஆர்வமாக இருக்கின்றனர். நீங்கள் மட்டும் அந்த விமான விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றாமல் இருந்திருந்தால், இந்தியர்கள் கடுமையான எதிர்ப்பினை சம்பாதித்து இருப்பார்கள்.

நீங்கள் பயணிகளைக் காப்பாற்றாமல் விட்டிருந்தால்? இந்தியாவும் இந்தியாவை சேர்ந்த மற்ற விமானிகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பார்கள்? எவ்வாறு நடத்தப்பட்டு இருப்பார்கள்? என்று தெரியாது. நீங்கள் மொத்தமாக அனைவரையுமே காப்பாற்றி உள்ளீர்கள். நீங்கள் ஒரு சிறப்பான பணியினை செய்து உள்ளீர்கள்," என்று பாராட்டினார்.

தற்போது சர்வதேச ஹீரோவாகியுள்ள விமானி ஸ்மித் மச்சார் , தன்னை ஹனுமன் சலிசா காப்பாற்றியுள்ளதாக கூறியதை தொடர்ந்து, பலரும் ஹனுமன் சலீசா பற்றி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com