சாலை விபத்தா? ரூ.1.5 லட்சம் வரை இலவசம்: ‘PM RAHAT’ திட்டத்தின் கீழ் பயன்பெறுவது எப்படி?

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரதம மந்திரி ரஹத் திட்டத்தின் கீழ் பணமில்லா சிகிச்சை, தகுதி, காப்பீடு பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
PM Rahat Scheme for road accident
PM Rahat Scheme for road accidentAI Image
Published on

இந்தியாவில் சாலைகளில் பயணம் செய்வது என்பது பெரும்பாலான நேரங்களில் மிகவும் சவால் நிறைந்ததாகவே உள்ளது. எதிர்பாராத நிலையில் விபத்து ஏற்படும்போது, பண வசதி இல்லையே என்ற கவலையில் ஒரு உயிர் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு ஒரு புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

'பி.எம். ரஹத்' (PM RAHAT - Prime Minister Road Accident Health Assistance Technique) என்பது இந்திய சாலை விபத்தில் சிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விபத்து நடந்த 7 நாட்களுக்குள் ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா (Cashless) அவசர சிகிச்சையை உறுதி செய்யும் மத்திய அரசின் புதிய திட்டமாகும். மேலும் எந்தவொரு பாதிக்கப்பட்டவருக்கும் நிதி நெருக்கடியால் மருத்துவ சிகிச்சை மறுக்கப்படக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கோல்டன் ஹவர் எனப்படும் விபத்து நிகழ்ந்த முதல் மணிநேரத்திற்குள் உரிய சிகிச்சை கிடைத்தால், உயிரிழப்புகளை 50 சதவீதம் தடுத்துவிடலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘சேவா தீர்த்தில்’ (Seva Teerth) பிரதமர் பொறுப்பேற்றதும் எடுக்கப்பட்ட முதல் முக்கிய முடிவு இது என்பதில் இருந்தே, இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும்.

இதையும் படியுங்கள்:
சாலை விபத்தில் உயிரைக் காப்பாற்றும் ஹீரோக்களுக்கு ₹25,000 வெகுமதி !- மத்திய அரசின் 'ரஹ்-வீர்' திட்டம்..!
PM Rahat Scheme for road accident

'பி.எம். ரஹத்' திட்டம் எப்படிச் செயல்படுகிறது?

இனிமேல் சாலையில் ஏதாவது விபத்து நடந்தால் அங்கு உதவிக்கு வரும் நல்மனம் கொண்டவர்கள் (Rah-Veer) உடனடியாக 112 என்ற அவசர எண்ணைத் தொடர்புகொண்டால் போதும். இந்த எண், அவசரக்கால உதவி அமைப்புடன் (ERSS) இணைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவரை உடனடியாக அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ், எந்தவொரு சாலைப் பிரிவிலும் (தேசிய நெடுஞ்சாலை முதல் கிராம சாலை வரை) உள்ள தகுதியுள்ள அனைத்து சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விபத்து நடந்த தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு ஒரு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.5 லட்சம் வரை ரொக்கமில்லா (Cashless) சிகிச்சை கிடைக்கும். விபத்து நடந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் வரை இந்த மருத்துவக் காப்பீடு செல்லுபடியாகும்.

இந்தச் சிகிச்சைகள் அனைத்தும் ஒரு டிஜிட்டல் அமைப்பின் மூலம் காவல் துறையின் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். மிக முக்கியமாக சிகிச்சை பெறுவதற்குப் பணமோ அல்லது இன்சூரன்ஸ் அட்டையோ கையில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்தத் திட்டம் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் (eDAR) தளத்தையும், தேசிய சுகாதார ஆணையத்தின் (TMS 2.0) தளத்தையும் இணைத்திருப்பதால், விபத்து அறிக்கையிடலில் இருந்து மருத்துவமனையில் அனுமதி, காவல்துறை அங்கீகாரம், சிகிச்சை நிர்வாகம், உரிமைகோரல் செயலாக்கம் மற்றும் இறுதி கட்டணம் வரை டிஜிட்டல் இணைப்பிற்கு இந்த ஒருங்கிணைப்பு உதவும்.

பணம் பட்டுவாடா செய்யும்முறை

விபத்தை ஏற்படுத்திய வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தால், அதற்கான சிகிச்சைச் செலவை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும். அதேசமயம், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் 'ஹிட் அண்ட் ரன்' (Hit & Run) வழக்குகளில், மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவமனைக்கு பணம் வழங்கப்படும்.

மாநில சுகாதார முகமையால் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைக்கான தொகையை 10 நாட்களுக்குள் மருத்துவமனைக்கு அரசு செலுத்திவிடும்.

குறை தீர்க்கும் முறை

இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது புகார்கள் இருந்தால், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட சாலைப் பாதுகாப்புத் குழு நியமித்துள்ள அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
விபத்தில்லா சாலை திட்டம்: தரம் உயர்த்தப்படும் தமிழக சாலைகள் லிஸ்ட் ரெடி..!
PM Rahat Scheme for road accident

இந்தியாவில் உள்ள எந்தஒரு குடிமகனுக்கும் இனிமேல் சாலை விபத்து ஏற்படும் பட்சத்தில் நிதி நெருக்கடியால் அவசர சிகிச்சையைப் பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த பி.எம். ரஹத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com