Own House Financial Assistance
New scheme

வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்! ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! PMAY திட்டத்தின் புதிய அப்டேட்..!

Published on

எல்லாருக்குமே சொந்த வீடு கட்டவேண்டும் என்ற ஆசை, கனவு இருக்கும். உங்களுடைய கனவை நினைவாக்கும் பொருட்டு மத்திய அரசு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்காங்க. ஒன்றிய அரசால் கடந்த 2015 முதல் முதல் செயல்பட்டுவரும் இந்த திட்டம் தற்போது, இந்த திட்டம் 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குகிறது. அந்த திட்டத்தின் நோக்கம், யாருமே வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்பது தான்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) மூலம் வருமானத்தில் பின்தங்கிய மக்களுக்கு வீடு கட்ட உதவி செய்வதற்காக PMAY என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U) ஆகிய இரண்டு வகையான திட்டத்தின் மூலமாக வீடுகள் கட்டித்தரப்படுகின்றன.

2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இந்தத் திட்டத்துக்கு ரூ.80,671 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 18% அதிகரிப்பாகும்.

இதையும் படியுங்கள்:
இனி வீடு வாங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! டிஜிட்டல் பாதையில் TNHB.!
Own House Financial Assistance

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வாயிலாக தகுதியானவர்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வீடு கட்ட மானியங்கள், வட்டி சலுகைகள் அளிக்கப்படுகின்றன, மேலும் 2028-29 வரை கிராமப்புறத் திட்டம் (PMAY-G) நீட்டிக்கப்பட்டு, 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மானிய தொகையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PMAY திட்டத்தின் வாயிலாக நிரந்தர வீடு இல்லாத, தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் வீடு கட்டித்தர விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் வாயிலாக பலன் பெறுவதற்கு இத்திட்டம் குறித்த தகுதிகள் மற்றும் பலன்கள் பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

தேவையான தகுதிகள் :

* குடும்பத்தில் சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த மானியத்தை பெறலாம்.

* விண்ணப்பிக்கும் நபருக்கோ அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரிலோ சொந்த வீடு இருக்கக்கூடாது.

* விண்ணப்பத்தாரரில் பெயர் ரேஷன் கார்டு அல்லது பிபிஎல் பட்டியலில் இருக்க வேண்டும்.

* அத்துடன் அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

* 18 வயது நிரம்பிய தகுதியானவர்கள் மட்டும் (ஆதாரத்திற்கு ஏதேனும் செல்லும்படியாகும் அடையாள அட்டையை வைத்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.)

விண்ணப்பிக்க முடியாதவர்கள் :

சொந்த வீடு இருப்பவர்கள், இருசக்கர வாகனம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், ரூ.50,000 முதல் அதற்கு மேல் வரம்பு வரை கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) வைத்திருப்பவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், ஜிஎஸ்டி, வருமான வரி கட்டுபவர்கள், வீட்டில் பிரிட்ஜ், லேண்ட்டு லைன் போன் இருப்பவர்கள், 2.5 ஏக்கர் பாசன வசதி கொண்ட நிலம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள்.

வட்டி மானியத் திட்டம்

* அதிகபட்சமாக 12 வருட காலத்திற்கு முதல் ரூ.8 லட்சம் கடனுக்கு 4% வட்டி மானியம்.

* ரூ.35 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களுக்கு ரூ.25 லட்சம் வரை கடன்கள் கிடைக்கும்.

* அதிகபட்ச மானியம் ரூ.1.80 லட்சம் வரை ஐந்து வருட தவணைகளில் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட மானியமும், வீட்டுக் கடனுக்கான வட்டி சலுகையும் வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வாயிலாக அதிகபட்ச மானியமாக ரூ.12 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் 3 சதவீத வருடாந்திர வட்டி தள்ளுபடி உண்டு. எனவே, ரூ. 12 லட்ச கடன் தொகையில், உங்கள் ரூ. 2.3 லட்ச PMAY மானியம் கழிக்கப்படும். எளிமையாகச் சொன்னால், மீதமுள்ள ரூ. 9.7 லட்சத்திற்கு நீங்கள் EMI செலுத்துவீர்கள்.

உதாரணமாக, ரூ.8 லட்சம் கடன் பெற்றால், அதில் ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதன்படி ரூ.5.80 லட்சத்திற்கு மட்டும் இஎம்ஐ செலுத்தினால் போதும். ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான கடனுக்கு 3 முதல் 6.50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, ரூ.18 லட்சம் வரை வீடுக் கடனுக்கு வட்டி சலுகை வழங்கப்படும். குறிப்பாக, வருமான அடிப்படையில் தாழ்வான மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கே இந்த வங்கி கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.! இனி வீடு கட்டும் செலவு பலமடங்கு குறையும்..!
Own House Financial Assistance

ஆன்லைனில் PMAY - https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வஇணையதள முகவரிக்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் ஆஃப்லைனிலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com