உடனே விண்ணப்பீங்க..! பிரபல வங்கியில் 750 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480..!

BANK
BANK
Published on

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 750 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 85 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனம் : பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 750

பணியிடம் : தமிழ்நாடு, இந்தியா

ஆரம்ப தேதி : 03.11.2025

கடைசி தேதி : 23.11.2025

பதவி: Local Bank Officer (LBO)

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

கல்வி தகுதி: இந்த LBO பதவிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Bachelor Degree) பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s/ PWD – Rs.59/-

  • Others – Rs.1,180/-

தேர்வு செய்யும் முறை:

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது/ வங்கி சார்ந்த 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.11.2025

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தமிழகத்தில் 10, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு..!!
BANK

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com