10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்கு மத்திய அரசு அனுமதி..!!

காகித பணத்திற்கு மாற்றாக இந்தியாவில் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது ரிசர்வ் வங்கி. இதன் சிறப்பம்சங்கள் என்ன?
Plastic Notes
Polimer rupeesinstagram
Updated on

இந்தியாவில் நீண்ட காலமாக காகிதத்திலேயே பணம் அச்சடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் முதன்முறையாக பிரிட்டிஷ் அரசாங்கம் காகிதத்தில் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவில் ரூபாய் நோட்டுதான் காகிதத்திலேயே அச்சடிக்கப்பட்டு வருகின்றன. உலகின் பல நாடுகள் காகிதத்தை விட்டு பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு மாறினாலும் ,இந்தியா தற்போது தான் தனது பணத்தினை நவீனமாக்க முடிவு செய்துள்ளது.

இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் பாலிமர் எனப்படும் மூலக்கூறினால் உருவாக்கப்படுபவை. சாதாரண காகிதம் நீரில் நனைந்தாலோ , அடிக்கடி உபயோகத்தில் இருக்கும் போதோ , விரைவில் அழுக்காகி , கிழிய தொடங்குகின்றன. ஒருமுறை தண்ணீரில் இந்த நோட்டுகள் நனைந்து விட்டால், அதன் ஆயுட்காலம் பெருமளவில் குறைந்து விடுகிறது. ஆனால், பாலிமரில் செய்யப்படும் நோட்டுகள் தண்ணீரில் நனைந்தாலும், அதில் தண்ணீர் உள்ளே போகாது. அதேபோல அது அதிகப்படியான புழக்கத்தில் இருந்தாலும் அதன் ஆயுட்காலம் குறைவதும் இல்லை. இந்த நோட்டுகள் நீண்ட காலம் உழைப்பதால் அடிக்கடி நோட்டுகள் அச்சடிக்கும் பணியும் குறையும். மாறிவரும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் தனது நவீனத்துவத்தை பிரதிபலிப்பது அவசியமாகிறது.

Plastic Notes
Polimer rupeesCBFC

ரிசர்வ் வங்கி முதற்கட்டமாக ₹3000 கோடி மதிப்பில் , பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து சோதனைப் புழக்கத்தில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ₹10 நோட்டும் ₹20 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் விட உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளில் இந்திய ரிசர்வ் வங்கி மும்முரமாக உள்ளது. இது பற்றி நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அறிக்கை அளித்திருந்தார். ரிசர்வ் வங்கியின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

​இந்த சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக, தலா ₹10 மற்றும் ₹20 மதிப்புடைய , ₹100 கோடி நோட்டுகள் தயாரிக்கப்பட்டுச் சந்தையில் வெளியிடப்பட உள்ளன. பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றுடன் தற்போதைய காகித நோட்டுகளுடன் இணைந்தே புழக்கத்தில் இருக்கும். மேலும் அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் முழுமையாக பிளாஸ்டிக் நோட்டாக மாற்றும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை, என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான 'பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்' (BRBNMPL), பாலிமர் ரூபாய் நோட்டு திட்டத்திற்காக , ஜூலை 17 அன்று 3.4 கோடி பாலிமர் தாள்களைக் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை வெளியிட்டிருந்தது. இந்தியாவில் ​பிளாஸ்டிக் நோட்டுகளைச் சோதனை செய்வது முதல் முறையல்ல.

2009 ஆண்டு மத்தியில் ₹10 பிளாஸ்டிக் நோட்டுகளை கொச்சி, மைசூரு, சிம்லா, ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய வெவ்வேறு தட்பவெப்பநிலை கொண்ட நகரங்களில் புழக்கத்தில் விட்டு சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது. ஆயினும் ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

பிளாஸ்டிக் நோட்டுகளை உலகில் முதல் முறையாக, ​ஆஸ்திரேலியா 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தற்போது உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தப் பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் இந்தியாவும் இந்த நவீன முறைக்கு மாற உள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்திய ரூபாய் நோட்டுகள் எங்கே, எப்படி அச்சடிக்கப்படுகின்றன? உங்களுக்குத் தெரியாத ரகசியங்கள்!
Plastic Notes
இதையும் படியுங்கள்:
நடுத்தர மக்களுக்கான ஜாக்பாட்.. வெறும் ரூ.1000 இருந்தா போதும் பணமழை கொட்டும்!
Plastic Notes
logo
Kalki Online
kalkionline.com