

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானது.
நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தலமான டீ அனாவ் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தெற்கு தீவு கடலோர பகுதிகளில் (South Island)சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது கடல்சார் அறிவுறுத்தலாகக் குறைக்கப்பட்டது.
முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களுக்குப் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டாலும், கடலோர பகுதிகளில் அபாயகரமான கடல் அலைகள் மற்றும் வலுவான நீரோட்டம் நீடிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், அவசரகாலத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் இல்லை.
இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வீதிகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் தஞ்சமடைந்தனர். மேலும் மக்கள் உடனடியாக உயரமான இடங்கள் அல்லது சுனாமி மீட்பு மண்டலங்களுக்குள் விரைவாக செல்ல வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என NEMA பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலா நுழைவாயிலாகக் கருதப்படும் 'தே அனாவ்' (Te Anau) நகருக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தே அனாவ் என்பது நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள ஒரு அழகிய சுற்றுலா நகரமாகும்.
இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடுவார்கள். இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடக்கத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் சர்வதேச நில அதிர்வு மையங்கள் (NEMA) இதனை 5.9 ரிக்டர் அளவாக மாற்றியமைத்தன. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 51 முதல் 53 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறிய புவியியல் நிபுணர்கள், இதன் அதிர்வுகள் ஒடாகோ, சவுத்லேண்ட் மற்றும் கேன்டர்பரி வரை மிக நீண்ட தூரத்திற்கு உணரப்பட்டதாக கூறினர்.
கடந்த ஜூன் 24-ம்தேதி, வெனிசுலாவில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவானது. கடும் சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,734 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 16,740 ஆகும்.
நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்த நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின் படி, நிலநடுக்கங்களின் போது நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், சுமார் 50,000 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
வெனிசுலா நிலநடுக்கப் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில், தற்போது நியூசிலாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.