GST 2.0: இன்று முதல் அதிரடியாக குறையும் குழந்தைகளின் உணவுப்பொருட்கள்..!

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்படும் ஊட்டச்சத்து தயாரிப்பு பொருட்களின் விலை இன்று முதல் அதிரடியாக விலை குறைய உள்ளது.
grocery buying
grocery buying
Published on

மத்திய அரசு மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு விகிதம் இன்று (செப்டம்பர் 22-ம் தேதி) முதல் அமலுக்கு வர உள்ளதால், அன்றிலிருந்து மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறையவுள்ளன.

அந்த வகையில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்படும் ஊட்டச்சத்து தயாரிப்புகளான cerelac, Nestle Lactogen, டானோன் (Danone) உள்ளிட்ட பொருட்களின் விலையில் அதிகளவு குறைய உள்ளது.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தயாரிப்புகளின் திருத்தப்பட்ட விலைகள் பட்டியலை இங்கே பார்க்கலாம்:

Nestleயின் ஊட்டச்சத்து தயாரிப்புகளின் திருத்தப்பட்ட விலைகள் :

Nestleயின் அவர்களது ஊட்டச்சத்து தயாரிப்பு பொருட்களின் விலையில் தோரயமாக 24 ரூபாயில் இருந்து 110 ரூபாய் வரை குறைந்துள்ளது.

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுப்பொருட்களான Lactogen PRO 1 (400 G) 495 ரூபாயில் இருந்து 55 ரூபாய் குறைந்து 440 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.

cerelac(350 G) 295 ரூபாயில் இருந்து 30 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கு விற்பனையாகும்.

Lactogen PRO 1 (400 g) : பழைய விலை ரூ.495 - புதிய விலை ரூ. 440 (குறைவு ரூ.55)

Lactogen PRO 2 (400 g) : பழைய விலை ரூ.495 - புதிய விலை ரூ. 440 (குறைவு ரூ.55)

இதையும் படியுங்கள்:
GST 2.0: எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்க போகிறது தெரியுமா? வெளியான புதிய அப்டேட்..!
grocery buying

Nestongen 1 (400 g) :பழைய விலை ரூ.299 - புதிய விலை ரூ. 265 (குறைவு ரூ.34)

Nestongen 2 (400 g) :பழைய விலை ரூ.295 - புதிய விலை ரூ. 265 (குறைவு ரூ.30)

Nan Pro 1 (400 g) :பழைய விலை ரூ.845 - புதிய விலை ரூ. 755 (குறைவு ரூ.90)

Nan Pro 2 (400 g) :பழைய விலை ரூ.845 - புதிய விலை ரூ. 755 (குறைவு ரூ.90)

Nan excella Pro 1 (400 g) :பழைய விலை ரூ.1030 - புதிய விலை ரூ.920 (குறைவு ரூ.110)

Nan excella Pro 2 (400 g) :பழைய விலை ரூ.995 - புதிய விலை ரூ.885 (குறைவு ரூ.110)

cerelac wheat apple (350 g): பழைய விலை ரூ.295 - புதிய விலை ரூ.265 (குறைவு ரூ.30)

cerelac rice vegetable (300 g): பழைய விலை ரூ.310 - புதிய விலை ரூ.275 (குறைவு ரூ.35)

Nestum Rice (300 g) :பழைய விலை ரூ.199 - புதிய விலை ரூ.175 (குறைவு ரூ.24)

ceregrow Multigrain cereal (300 g):பழைய விலை ரூ.345 - புதிய விலை ரூ.299 (குறைவு ரூ.46)

Lactogrow (400 g) :பழைய விலை ரூ.410 - புதிய விலை ரூ.365 (குறைவு ரூ.45)

Nangrow (400 g) :பழைய விலை ரூ.640 - புதிய விலை ரூ.570 (குறைவு ரூ.70)

ஊட்டச்சத்து மூலம் ஆரோக்கியமான ஆற்றல் மிக்க இந்தியாவை உருவாக்கும் பொருட்டு டானோன் (Danone) தயாரிப்புகளுக்கான விலை குறைப்பு பற்றி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அந்த வகையில் டானோன் தயாரிப்புகள் தோராயமாக 55 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை குறைந்துள்ளது. உங்களின் நம்பகமான ஊட்டச்சத்து பிராண்ட்கள் இப்போது இன்னும் குறைவான விலைகளில்...

Protinex Original 400 g : பழைய விலை ரூ.750 - புதிய விலை ரூ.665 (குறைவு ரூ.85)

Protinex Rich chocolate 400 g: பழைய விலை ரூ.675 - புதிய விலை ரூ.599 (குறைவு ரூ.76)

Protinex creamy vanilla 400 g: பழைய விலை ரூ.675 - புதிய விலை ரூ.599 (குறைவு ரூ.76)

Protinex diabetes care 400 g: பழைய விலை ரூ.760 - புதிய விலை ரூ.675 (குறைவு ரூ.85)

Aptamil Gold 1 400 g: பழைய விலை ரூ.1080 - புதிய விலை ரூ.960 (குறைவு ரூ.120)

Aptamil premum 1 400 g: பழைய விலை ரூ.790 - புதிய விலை ரூ.699 (குறைவு ரூ.91)

Dexolac 1 400 g: பழைய விலை ரூ.525 - புதிய விலை ரூ.465 (குறைவு ரூ.60)

Aptagrow chocolate 400 g: பழைய விலை ரூ.625 - புதிய விலை ரூ.555 (குறைவு ரூ.70)

Dexogrow 400 g: பழைய விலை ரூ.490 - புதிய விலை ரூ.435 (குறைவு ரூ.55)

இதையும் படியுங்கள்:
GST வரி குறைப்பின் தாக்கம்: சாமானியரின் வாழ்வில் எப்படி இருக்கும்?
grocery buying

புகார் செய்யலாம் :

பொருட்களின் விலை குறையாமல் அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் நேரடியாக புகார் அளிக்க நுகர்வோர் புகார் ஒருங்கிணைந்த இணையதளம் https://consumerhelpline.gov.in மற்றும் தேசிய நுகர்வோர் உதவி எண் 1800-11-4000 மற்றும் 1915 ஆகியவற்றில் சிறப்பு பிரிவு திறக்கப்பட்டு உள்ளது.

செல்போனில் இருந்து 14404 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com