
அமெரிக்காவைச் சேர்ந்தவர் லெக்ஸ் ஃப்ரிட்மேன். இவர் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப நிபுணர் என பன்முகங்களை கொண்டவர்.
'பாட்காஸ்ட்' எனப்படும் ஒலியலை நேர்காணலுக்காக அவர் பிரதமர் மோடியினை சந்தித்தார், சுமார் மூன்றுமணி நேரம் இந்த பேட்டி தொடர்ந்தது, தன் 11 ஆண்டுகால பிரதமர் பதவி வாழ்வில் மோடி மனம் திறந்து பேசிய காட்சி இது.
எல்லா கேள்விக்கும் மோடியின் பதில் பொருத்தமாக இருந்தது என்பதை விட ஞானமாக இருந்தது.
அந்த ஃப்ரிட்மேன் தொடக்கத்திலே சிலிர்க்க வைத்தார், மோடி என்பவர் வெறும் அரசியல் தலைவர் அல்ல, ஒரு நாட்டின் பிரதமர் அல்ல அவர் ஒரு யோகி என்பதை உணர்ந்ததாக சொன்னார்.
"நான் கடந்த இரண்டு நாட்களாக, வெறும் தண்ணீர் மட்டும் குடித்து உபவாசம் இருந்தேன். அப்போது தான், உங்களுடைய ஆன்மிக நிலைக்கு கிட்டத்தட்ட நெருங்கி, ஒரே மன ஓட்டத்துடன் இருக்க முடியும் என்று நினைத்தேன்".
எவ்வளவுக்கு ஒரு அமெரிக்கன் மோடியை புரிந்திருக்கின்றார் என்றால் இப்படித்தான், மோடியை ஒரு யோகியாகவே அவர்கள் கருதுகின்றார்.
மோடி எல்லா விஷயங்களையும் தொட்டு பேசினார், உக்ரைன் போர் தொடங்கி உலக பொருளாதாரம், மானுட சிக்கல்கள், கல்வி, மருத்துவம், உலகில் இந்தியாவின் முக்கியத்துவம் என எல்லாமும் தொட்டு அவர் பேசியபோது பாரதம் தாண்டி உலகம் பற்றி சிந்திக்கும் ஒரு கர்ம யோகியாகவே அவர் தெரிந்தார்.
"நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை நான் மிகவும் நம்புகிறேன். நான் இங்கு ஏதோ ஒரு செயலுக்காக வந்துள்ளேன். அதற்காகவே, என்னை அந்த சக்தி அனுப்பி வைத்துள்ளது. நான் எப்போதும் தனிமையாக உணர்ந்ததில்லை. என்னை அனுப்பிய சக்தி என்னுடனேயே இருப்பதாகவே கருதுகிறேன்" என தொடங்கும் மோடியின் பேச்சு முழு ஞானி பக்குவத்தை காட்டுகின்றது.
உலகம் முழுக்க மோடியின் அந்த சந்திப்பும் அவரின் பேச்சும் வேகமாக பரவுகின்றது, உலக தலைவர்கள் அதை பாராட்டுகின்றார்கள்.
உலக ஊடகங்களும் அரசியல் நிபுணர்களும் உருகி நிற்கின்றார்கள், பாரத பெருமை அப்படி உயர்ந்து நிற்கின்றது