பாரத் ஜோடோ யாத்திரையில் மகளுடன் பிரியங்கா காந்தி!

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கும் தன் கட்சியை பலப்படுத்தவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இப்போது  ராஜஸ்தானில் நடைபெற்று வரும்  இப்பயணத்தில் நேற்று ராகுல் காந்தியுடன்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தன் கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் மகள் மிராயா வத்ராவுடன் கலந்து கொண்டனர். மேலும், இந்த யாத்திரையின் போது உள்ளூர் ராஜஸ்தானிய நாட்டுப்புற கலைஞர்களுடன் சேர்ந்து பிரியங்கா காந்தி நடனம் டான்ஸ் ஆடினார்.

நேற்று ராஜஸ்தானில் மகிளா சக்திகரன் திவாஸ் என்ற பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், ஏராளமான பெண்கள் மேலும், அவரது நடைபயணத்தின்போது,  பெண்கள் இந்த யாத்திரையில் கலந்து கொண்டனர்.

மேலும் உள்ளூர் கலைக்குழுவினர், தங்களின் பாரம்பரிய ராஜஸ்தானி ஆடைகளை அணிந்து நாட்டுப்புற பாடல்களை பாடி ஆடி வரவேற்றனர். அப்போது பிரியங்கா காந்தியையும் தங்களுடன் ஆட அழைக்க, அவரும் அவர்களுடன் ஆடி மகிழ்ந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com