தனுஷின் இந்த படத்தை நான் இயக்கவில்லை, எனக்கு எதுவும் ஞாபகமே இல்லை என்று பேசி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜிவிஎம்.
கோலிவுட்டின் பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். காதல் படங்கள் என்றால் பலருக்கு படித்தமானவை ஜிவிஎம் படங்கள்தான். இயக்குநர் ராஜீவ் மேனனின் உதவியாளாரக பணியாற்றிய இவர், பின்னர் மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினார்.
முதல் படமே பெரிய ஹிட் அடித்தது. இன்றைய ரசிகர்களின் ஃபேவரெட் படம் மின்னலே. அதன் பின்னர் இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.
இயக்குநராக மட்டுமல்ல நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு ஜோஸ்வா இமை போல் காக்க என்ற இடம் இவரின் இயக்கத்தில் வெளியானது. ஆனால், அந்த அளவிற்கு இந்தப் படம் வெற்றியடையவில்லை.
தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் படம் ‘Dominic and the Ladies Purse’. இந்த படத்தின் மூலம் தான் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆக இருக்கிறார். இந்தப் படத்தை மம்முட்டியே தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் 23 அன்று வெளியாகிறது. ஆகையால், படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கௌதம் மேனன், பதிலளிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின் அவர், அந்த படத்தின் பெயர் என்ன சொன்னீர்கள்? எனக்கு அதில் ஒரு பாடல் மட்டும் தான் தெரியும். அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. வேறு யாராவது இயக்கி இருப்பார்கள் என்று கூறி இருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதன்மூலம் தனுஷ் ஜிவிஎம் இருவருக்குள்ளும் எதோ கருத்து வேறுபாடு இருப்பது உறுதியானது.