

ராஜஸ்தான் மாநிலம், ஜுந்தா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை மதியம் நடந்த சாலை விபத்தில் ஆர்.பி.சௌத்ரி உயிரிழந்தார்.அவருடன் காரில் பயணித்த அவரது மருமகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் பயணித்த அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீது மோதியதாக அவர் இறந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தனிப்பட்ட பணிக்காக பயணம் செய்திருந்த அவர், விபத்துக்குள்ளானபோது கடுமையான அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்கவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த அவர், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஆரம்ப வெற்றிப் படங்களில் முக்கிய பங்காற்றியவர்.
அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சற்று முன் தவெக தலைவர் விஜய் ஆர்.பி.சௌத்ரி உடலுக்கு மரியாதை செலுத்த நேரில் வந்தார்.