மிஸ் பண்ணிடாதீங்க..!ரயில்வேயில் 6,557 பணியிடங்கள்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.!

Railway Jobs - RRB
Railway Jobs
Updated on

அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என்பது தான் பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு அடுத்து, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் (RRB) நடத்தப்படும் தேர்வுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையில் தற்போது 6,557 டெக்னீசியன் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது RRB.

இந்த வேலையில் சேர்வதற்கு 10 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், அவ்வப்போது நிரப்பி வருகிறது. அவ்வகையில் RRB Technician Grade I மற்றும் Grade III பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியம் இன்று (ஜூலை 29) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கு நாளை (ஜூலை 30) முதல் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் கடைசி தேதி உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

கல்வித் தகுதி:

டெக்னீசியன் கிரேட் I - இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், கணிணி அறிவியல் மற்றும் ஐடி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டபப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

டெக்னீசியன் கிரேட் III - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI முடித்திருந்தால் போதுமானது.

வயது வரம்பு:

ரயில்வே துறை விதிகளின்படி டெக்னீசகயன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம். இருப்பினும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டு தளர்வுகளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகளும் வழங்கப்படும்.

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 6,557

காலிப் பணியிடங்களின் விவரம்: டெக்னீசியன் கிரேட் I, டெக்னீசியன் கிரேட் III

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 30-06-2026

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29-07-2026

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://www.rrbchennai.gov.in/ or https://www.rrb.gov.in/

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் ரூ.500-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வை எழுதிய பிறகு பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வை எழுதிய பிறகு அவர்களுக்கு இந்த கட்டணம் முழுமையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

RRB Technicians Job Vacancy
Railway Jobs
இதையும் படியுங்கள்:
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! ரயில்வேயில் 22,000 வேலை.! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!
Railway Jobs - RRB

சம்பள விவரம்:

டெக்னீசியன் கிரேட் I - ரூ.29,200

டெக்னீசியன் கிரேட் III - ரூ.19,900

தேர்வு முறை:

விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கணினி அடிப்படைத் தேர்வு (Computer Based Test) நடத்தப்படும். தேர்வுக்கு முன்பாக இணலயதளம் வழியாக ஹால் டிக்கெட் வழங்கப்படும்.

முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெரும் விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்டமாக உடல்திறன் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்புகள் நடைபெறும். இறுதியாக காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடந்த ஜனவரி மாதம் குரூப் டி பணியிடங்களுக்கு சுமார் 22,000 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் 6,557 பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் நாளை முதலே விண்ணப்பிக்கத் தொடங்குவது தான் நல்லது. ஏனெனில் கடைசி நேரத்தில் நெட்வொர்க் பிரச்சனைகள் அதிகம் வர வாய்ப்புள்ளது என்பதால், கால தாமதமாகி விடும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!!வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடி சரிவு.!
Railway Jobs - RRB
logo
Kalki Online
kalkionline.com